Thursday 30 July 2020

வரலாற்று தலைவர்கள் வரிசை 7: ரேணு சக்ரவர்த்தி



நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -7

             
                     ரேணு சக்ரவர்த்தி:
 பன்முக ஆற்றல்மிக்கத் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

 (நியூஏஜ் ஜூலை26 –ஆக.1)

    

குடும்பம்

        1917 அக்டோபர் 21ல் பிறந்தார். (யுகப்புரட்சி வெற்றியோடு பிறந்தவர் எனலாம்). அவருடைய தாத்தா பாட்டி, அனைவரும் அறிந்த பிரகாஷ் சந்திர ராய் மற்றும்

இளமை காலமும் இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் ஆனதும்

        Tripos) RPD எனச் சுருக்கமாக அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் ரஜினி பாமி தத் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட்களின் தொடர்பைப் பெற்று 1938ல் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

        ‘goosestepping’) நடைநடந்து அணிவகுத்துச் செல்வதை ரேணு தீ தன் கண்களால் பார்த்திருக்கிறார். நாஜி ஜெர்மனி, ஆஸ்திரியா நாட்டை வல்லடியாக ஆக்கிரமித்ததை அவர் தமது நண்பர்களோடு நேரே பார்த்தார். அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் செயலாளராக இருந்த எமிலி ஷெங்கல் குறித்து அதிகம் நினைத்துக் கொண்டார் (ஆஸ்திரியப் பெண்ணான எமிலி, பின் நேதாஜியை மணந்தவர்). செக்கோஸ்லாவேக்கியா தாக்கப்பட்டு சுடன்லாந்து (செக் தேசத்தைச் சுற்றியுள்ள பகுதி) இணைத்துக் கொள்ளப்பட்டதும் நடந்தது. இவை அனைத்திற்குமாகத்தான் அவர் பாசிசத்தை வெறுத்தார். ஹிட்லர் மீது அவர் வெறுப்பு கொண்டதற்குக் காரணம், ஹிட்டரின் அதிகாரம் மிக்க வார்த்தைகள்,

        ஜான் ஸ்டரச்சே சொற்பொழிவுகளை ரேணுராய் கேட்டார். ரேணுராய், இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் இருந்த இந்திய மாணவர் சமூகங்களின் கூட்டமைப்பான ‘பெட்இண்ட்’ (FEDIND) அமைப்பின் நிறுவனப் பொதுச் செயலாளர். அமெரிக்காவில் 1938ல் நடைபெற்ற சர்வதேச இளைஞர் காங்கிரஸில் கலந்து கொண்டார்.

        பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி தனது நினைவுக் குறிப்பில் பதிந்துள்ளார். அந்த நாட்களில் அப்போது எழுப்பப்பட்ட முழக்கம்,

இந்தியாவில் இயக்கங்களில் பங்கேற்றல்

        “எனது நாட்டின் விடுதலைக்காகப் போராடுவது என்ற கொழுந்துவிட்டு எரியும் எண்ணங்களோடு நான் இந்தியா திரும்பினேன்.” கல்கத்தா பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் விரிவுரையாளராகச் சேர்ந்து 1940 முதல் 1947 வரை பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே வெகுஜன இயக்கங்கள் மற்றும் கட்சி நடவடிக்கைகளிலும் நேரத்தைச் செலவிட்டார்.

        பெண்கள் இயக்கத்திற்கான கால்கோள் இளம் பெண்களால் நடத்தப்பட்டது.

        நிகில் சக்ரவர்த்தியோடு 1942 ஜனவரி 3ம் நாள் ரேணுராயின் திருமணம் இந்தியாவில் நடந்தது

போர், வறட்சி மற்றும் ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’ (MARC)யின் எழுச்சி

போரின்போது இந்திய பர்மா எல்லைகளில் பெண்கள் மீது பிரிட்டீஷ், அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய வன்முறை கொடுமைகளுக்கு எதிரான மனு ஒன்றினை வைஸ்ராயிடம் சமர்ப்பிக்கப் பலரிடமும் கையொப்பங்களைப் பெற மற்றவர்களோடு ரேணு ராய் மும்முரமாக ஈடுபட்டார். ஜப்பானிய படைகள் முன்னேறுவதை எதிர்த்துப் போராடும்போதே பிரிட்டீஷ்காரர்கள் கிராமங்களை அழிப்பதைத் தடுக்க ரேணுராய் மற்றவர்களோடு கிராமங்களுக்கு விரைந்தார். போர் அழிவுகளோடு பஞ்சத்தின் வறட்சி சூழ்நிலையும் உருவாகியது.

இந்த நிகழ்வுகளால் வங்காளத்தில்

மகிளா சமிதிக்கு அமைப்பாளர்கள் குழு ஒன்றை ரேணு சக்ரவர்த்தியும் வேறு சிலருமாக இணைந்து ஏப்ரல் 1942ல் அமைத்தனர். அதற்கு இளா ரெய்டு (Ela Reid) அமைப்புச் செயலாளர். இப்படி ரேணு சக்ரவர்த்தி, மணிகுந்தள சென், இளா போன்றோர் திறன்மிக்க அமைப்பை உருவாக்கி, பல ஆயிரம் உறுப்பினர்களோடு பெண்களின் குழு பிராந்தியம் முழுவதும் கிளை பரப்பியது.

பெண்களின் குழுவோடு, ஆதரவற்ற பெண்களுக்கான மறுவாழ்வு அளிப்பதற்காக “நாரீ சேவா சங்கம்” ஒன்றும் அமைக்கப்பட்டது. அதன் செயல்பாட்டின் மையப் புள்ளியாக ரேணு தீ(தி)யின் தாய் பிரம்ம குமாரி ராய் விளங்கினார். அவர் அனைத்திந்திய பெண்கள் மாநாடு அமைப்பிலும் செயல்பட்டார். நிகில் சக்ரவர்த்தியின் தாய் ஷைலஜா சக்ரவர்த்தியும் பெண்களின் விழிப்புணர்வுக்காகப் பாடுபட்டவராவார்.

கல்கத்தாவில் 1943 ஏப்ரல் 27 –28 தேதிகளில் நடந்த பெண்களின் சுய பாதுகாப்புக் குழுவின் முதல் மாநாட்டில் ரேணு தீ உரையாற்றினார். முதல் மாகாண மாநாடு 1943 மே மாதம் 8ல் கல்கத்தாவில் நடந்தபோது அதில் ரேணு தீ உணர்வு பொங்க பேசி, தெளிவான சித்திரத்தை முன்நிறுத்தினார். சட்டமன்ற கட்டடம் நோக்கி, வறட்சி நிவாரணம் கோரி 5000க்கும் பெண்கள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. ரேணு சக்ரவர்த்தி குடிமக்கள் பாதுகாப்பு அரண், முதல் உதவி மையங்கள்,

மணிகுந்தளா சென் (தனியாக எழுதப்பட வேண்டிய தனித்துவமான கம்யூனிஸ்ட் பெண் தலைவர், சிறை சென்ற சுதந்திரப்போராட்ட வீரர், கட்சி பிளவுக்குப் பிறகு அதிகம் சமூக சேவை, பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்டவர்) தனது பெண்கள் இயக்கப் போராட்ட நினைவுகளை “அன்றைய அந்த நாட்கள்” (வங்க மொழியில் ‘In Search of Freedom: An Unfinished Journey) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

ரேணு தீ ச்சாட்ரி சங் (Chhatri Sangh -- பெண் மாணவர்கள் அமைப்பு)டன் இணைந்து பணியாற்றி 1940ல் நடந்த அதன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் சரோஜினி நாயுடு.

நவகாளியிலும் பிற இடங்களிலும் 1946-47 மதக் கலவரங்கள் நடந்தபோது, தீவிரமாகத் தொண்டாற்றினார். அது பற்றி எழுதும்போது,

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW) அமைத்தல்

       

        WIDF)த்தின் இணைப்புக் குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. பெண்கள் சுய பாதுகாப்புச் சமிதி அதனுடைய இணைப்புச் சங்கமாகும். கோபன்ஹேகன் நகரில் 1953 ஜூன் மாதம் நடைபெற இருந்த உலக பெண்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதிநிதிகளுக்கான அழைப்பு, வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பிய ரேணு சக்ரவர்த்தி மூலம் எடுத்து வரப்பட்டது. WIDF அமைப்பு குறித்துப் பிரச்சாரம் செய்து பிரபலமாக்கி, 30 பிரதிநிதிகளை உலக மாநாட்டிற்கு அழைத்து வர ரேணு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அந்த வேண்டுகோளைப் பரிசீலிக்க 1953 மார்ச் 10ல் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. WIDF வேண்டுகோளில் 12 மாநிலங்களின் பிரதிநிதிகளும், ரேணு சக்ரவர்த்தியும், அருணா ஆசப் அலியும் கையெழுத்து இட்டிருந்தனர். பெங்காலி மார்கெட், புதுடெல்லியில் அதற்கான தயாரிப்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. 1953 மே 9ல் தேசியத் தயாரிப்பு மாநாடு நடத்தி, அனைத்திந்திய பெண்கள் மாநாட்டிற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

“பழைய நாட்களை அசைபோடல்”

       நினைவுக் குறிப்புகள்

        NFIW 1974 மலர் ஒன்றில், “முதல் மாநாடு கல்கத்தாவில் 1954ல் நடைபெற்றது;

        1954 ஜூன் 4ம் தேதி துவங்கி முறைப்படி NFIW இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் அமைக்கப்பட்டது. ரேணு சக்ரவர்த்தி துணைத் தலைவரானார். சம்மேளனத்தின் அமைப்பு விதிகளை வரைந்தார். சம்மேளனத்தின் 1962 மாநாட்டில் அவர் பொதுச் செயலாளராகத் தேர்வாகி 1970வரை அப்பொறுப்பில் இருந்தார்.

பாராளுமன்றத்தில் ரேணு தீ(தி)

        பசீர்கட் தொகுதியில் போட்டியிட்டு மேற்கு வங்கத்தில் இருந்து வெற்றிபெற்ற ஒரே பெண் உறுப்பினரானார். இரண்டாவது, மூன்றாவது முறையும் வெற்றி பெற்றார். 1962ல் நாட்டிலேயே அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற உறுப்பினர் அவராவார். தனது தொகுதியை அவர் புறக்கணித்ததில்லை, இதனால் மலைவாழ் மக்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் அவரிடம் அன்பு செலுத்தினர்.

 பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவம். ஒருமுறை கடுமையான வாக்குவாதம், பாராளுமன்றத்தில் புயல் வீசியது எனலாம். ஒரு சாதாரண சம்பவத்திற்காக ஏன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவ்வளவு ஆவேசமாக நடக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள இயலாத நேரு மிகவும் சங்கடப்பட்டு, அவரை தன் அறையில் விவாதிக்க அழைத்தார். அப்போது அவர் பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சி குழு துணைத் தலைவர். ரேணு தீ பிரதமரிடம், நடந்த சம்பவம் மக்களவை சபாநாயகர் போக்கின் எதிர்விளைவு என எடுத்துரைத்து விட்டு, உடனடியாகப் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மாற்றி, அந்த அறையில் மாட்டியிருந்த நேருவின் படத்தைப் புகழ்ந்துரைத்தார். (சூழ்நிலையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரது பண்பைக் காட்டும் நிகழ்வுகளில் ஒன்று அது). பிரதமருடன் விவாதித்து அவர் திரும்பியபோது, பிரதமர் அறையில் மாட்டியிருந்த படம் நேரு கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார், கூடவே விவாதம் குறித்த ஒரு கடிதத்தோடு.

பங்களா காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில்இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசில் 1969ல் அவர் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

கட்சியில் தலைவராக

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 1958 அமிர்தசரஸ் காங்கிரஸில் ரேணு தேசியக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க அவர் சிறிதும் தயங்கவில்லை. கட்சி பிளவிற்கு பின் மத்திய கட்டுப்பாடு குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950களில் ஜாம்ஷெட்பூர் போன்ற இடங்களில் தொழிலாளர் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டு சிறை தண்டனையையும் அனுபவித்தார்.

  என்ற அவர் எழுதிய புத்தகம், 1940 முதல் 50 வரையான பெண்கள் இயக்கங்கள் குறித்த விரிவும் ஆழமும் மிக்க ஒருங்கமைக்கப்பட்ட

        1994 ஏப்ரல் 16ம் நாள் மண்ணுலகை விட்டு மறைந்தார்.

பெண்கள் இயக்கத்திற்குச் சுடரும் ஒளி விளக்கான ரேணு சக்ரவர்த்தியின் புகழ் என்றென்றும் செங்கொடி போல் சிவந்து ஒளிரும்.

--தமிழில் : நீலகண்டன்,

 


Tuesday 28 July 2020

கோவிட் பாதிப்பு நேரத்தில் கோயில் கட்ட கோடிக் கணக்கில் செலவிடுவதா?




நியூஏஜ் (இதழ், ஜூலை26 –ஆக.1) கட்டுரை

அயோத்தியா விளையாட்டை நிறுத்து!
கோயில் கட்டும் பணத்தை ஏழைகளுக்குச் செலவிடு!

--பினாய் விஸ்வம் MP
          டாக்டரின் ஸ்டெத்தஸ்கோப் போல அரசியல், சமூகத்தின் இதயத் துடிப்பைக் கட்சிகள் அறிந்து கொள்ள உதவுவது. கட்சிகளின் அரசியலைத் தீர்மானிக்கும் தத்துவம் அவற்றின் வழிமுறைகள், செயல்திட்டங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. தனது அரசியல் திட்டங்களை வெளிப்படையாக மக்களிடம் உடனடியாகத் தெரிவித்துவிடக் கூடாது என பாஜக நினைத்து, அவற்றை மறைத்தது ஒரு காலம். அந்தக் காலத்தில் அத்திட்டங்களின் நிகழ்ச்சிநிரலைச் சங்பரிவார் அரசியலின் கருவறையில் பக்தியோடு சேமித்து வைத்திருந்தனர். எனவேதான் அரசியல் நோக்கர்களும் “மறைமுகத் திட்டம்’’ என்று அழைத்தனர் போலும்!
        தேசிய அரசியல் அரங்கில் நரேந்திர மோடி நுழைந்தது முதல், அவர்களின் நிகழ்ச்சி நிரலின் ஒவ்வொன்றாக, மக்களின் விருப்பம் என்று சொல்லி, சமூகத்தின்முன் உந்தித் தள்ளப்படுகின்றன. இரண்டாவது முறை மோடி ஆட்சியில் மறைமுகத் திட்டங்கள் கொடூரமாக வெளிப்படுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, அயோத்தியா, ஜம்மு காஷ்மீர் எனப் பல தருணங்களிலும் அதனை நாட்டு மக்கள் பார்த்து வருகின்றனர். பக்தியோடு பாதுகாத்த நிகழ்ச்சி நிரல் அமலாக்குவதற்கான நேரம் கனிந்து விட்டது என்பது அவர்கள் தத்துவத்தின்படி பாஜக-வின் அரசியல் கணிப்பு. ஒரு வகையில் உண்மைதான், பலஆண்டுகளாகத் தொடர்ந்து சமூகத்தில் மத வெறுப்புணர்வுக்கான விதைகளை விதைத்து, களத்தை அதற்கேற்பத் தயாரித்து வந்தார்கள். சாதாரணமாக அல்ல, நன்கு திட்டமிட்டு இந்திய வாழ்வின் சகல பகுதிகளிலும் எதிர்ப்புக் குரல்களையும் அறிவார்ந்த கேள்விகளையும் தொடர்ந்து ஒடுக்கி வந்தார்கள்.
        இப்போது ராமர் கோயில் கட்டும் அறிவிப்பு, அநேகமாக ஆகஸ்ட் முதல் வாரம் துவங்குமென, வெளியாகி உள்ளது. இயல்பாகவே பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டுவார், அதுவும் வந்துள்ள தகவல்களின்படி,  ‘வெள்ளிப் பாளமாக’! எண்பது வயது முதியவரான எல்.கே அத்வானியையும் பூமி பூசைக்கு அழைக்கும் அளவு அவர்பால் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குப் பெரிய மனது!. என்ன இருந்தாலும் அவர் ஒரு காலத்தில் நரேந்திர மோடி உட்பட அனைவருக்கும் ‘லோக புருஷராக’ விளங்கியவர் அல்லவா! பிரம்மாண்டமான அத்திட்டத்தில் 1300 கோடி ரூபாய் செலவிடப்படும் எனத் தகவல்கள். கோயில் கட்டுமானம், சுற்றுப்புற நிலங்களை மேம்படுத்துவது உட்பட இந்தத் தொகை. இந்த முன்னேடுப்பு வரும் நாட்களிலும் பகவான் இராமர் பாஜக அரசியலின் மைய இடத்தை வகிப்பார் என்பதைப் பிரகடனப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டலில் ஏற்கனவே பாஜக, தங்கள் குறுகிய அரசியல் நோக்கத்திற்கு மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தும் கலையில் விஞ்சிவிட்டது. கடந்த காலங்களிலும்கூட தீவிர வலதுசாரி சக்திகள் புராணங்களையும் நம்பிக்கைகளையும் தங்கள் தேவைக்குப் பயன்படுத்தி உள்ளன. ஒருமுறை ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் புராண, மத, நம்பிக்கைகளை அன்றாடம் முற்றி வளரும் நெருக்கடிகளச் சமாளித்து மூடிமறைக்கும் நல்லதொரு மறைப்பாக்கி விடுகின்றன. வலதுசாரி அரசியல், மற்றும் அதன் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு மதநம்பிக்கை என்பது தங்கள் --பொருளாதாரப் பேராசை மற்றும் அதிகார வெறி – இலக்குகளைச் சுற்றி ஜனரஞ்சக உணர்ச்சி வெறியூட்டல் எழுப்பும் கருவி அவ்வளவே.
        இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1980 தொடங்கி உருவாகியுள்ள அரசியல் சமூக வளர்ச்சிப் போக்கின் திருப்பு முனை பாபர் மசூதியைச் சுற்றி அமைகிறது. ‘பிரித்தாளும் அரசியல்’ சூத்திரதாரிகளுக்கு அயோத்தியாவின் மோதல் முரண்பாடுகள் எப்போதுமே ஒரு வலிமையாக ஆயுதமாக உள்ளது. அப்பாவிகளான ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பக்தர்கள், தந்திரம் உடைய அரசியல்வாதிகளால் சூழ்ச்சியாகத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். அதிகார அரசியல் விளையாட்டு எனும் சதுரங்கத்தில் இப்போது அந்தச் சூழ்ச்சி விளையாட்டை விளையாடுவது நரேந்திரமோடியின் முறை.
அயோத்தியா காட்சிகளைப் பார்த்து வரும் நுட்பமான அறிவும் உணர்வும் உடைய இந்தியர்கள், எப்படியெல்லாம் இராமாயணம், சங் பரிவார் கூட்டத்தால் தவறாக வியாக்யானம் செய்யப்படுகிறது என்பதைக் கண்டு வியக்கவே செய்வர். எந்த ஸ்ரீஇராமனை அவர்கள் பேசுகின்றனர்? பவித்திரமான பக்தி உடைய அன்பர்கள் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு உரிமை படைத்தவர்கள். அது அவர்களின் உரிமை மட்டுமே அல்ல. இராமாயணம் போன்ற காவியங்கள் இந்தியக் கலப்புப் பண்பாட்டு மரபின் பிரிக்க முடியாத அங்கம். எனவே ஒவ்வொரு இந்தியனும் இந்தக் கேள்வியைக் கேட்க அதிகாரம் உடையவர்கள். எந்த இராமனைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்?
இராமாயண மகாகாவியத்தில் உள்ள ஸ்ரீஇராமரும் பாரதிய ஜனதா கட்சியின் (ஜெய்)ஸ்ரீராமும் ஒருவராக இருக்க முடியாது. இராமாயணத்தின் இராமர் மரியாதைக்குரிய புருஷோத்தமன். ஆனால் பிஜேபி கோஷமிடும் ஸ்ரீராம் அதிகாரப் போருக்காகச் சண்டையிடச் செல்லும் ஆயுதப்படை தலைவன். தந்தையின் ஒரு சொல்லைத் தலைமேற்கொண்டு அரியணையைத் துறந்த இராமர் எங்கே, பிறமத நம்பிக்கையாளரின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்தக் கரசேவகர்கள் கும்பலின் அடையாள ஸ்ரீராம் எங்கே? பதவியைத் துறந்த இராமாயண இராமரைப் பதவி வெறிக்கான அடையாளமாகப் பாஜக மாற்றி விட்டது. எனவே இராமாயண மகாகாவியத்தின் ஸ்ரீஇராமரும் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீராமும் ஒருவராக இருக்கவே முடியாது.
இராமாயணத்தில் வால்மீகி முனிவரின் இராமன், முடியைத் துறந்து கானகத்தில் கழித்த 14 ஆண்டுகளின் வாழ்க்கை,  மிகுந்த மகிழ்ச்சியோடும் திருப்தியாகவும் இருந்தது. ஆனால் பாஜகவின் ராம் அதிகாரத்திற்கு விரைவாகச் செல்லும் படிக்கட்டாக அல்லவா முன்னிறுத்தப்பட்டான் – இந்நாட்டு மக்கள் வாழ்க்கையின் உண்மையான நம்பிக்கை மிகுந்த கடவுளையே அவர்கள் களவாடிக் கடத்திச் சென்று விட்டார்கள். மக்களின் பக்திப் பாதையில் அவர்கள் நிகழ்த்திய நம்பிக்கை மோசடிப் போக்கை மறைக்க, மதத் தீவிரவாத உணர்வுகளை ஊதிப்பெருக்கி, மதநம்பிக்கை உள்ள சாதாரண மக்கள் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க முடியாதபடிச் செய்துவிட்டார்கள்.  
இராமாயணத்தின்படி ஸ்ரீராமருடைய முதன்மையான அக்கறை நாட்டு மக்களின் நலவாழ்வு. வீதியில் நடக்கும்போது எதிர்ப்படுவோரை அன்போடு நலம் விசாரிக்கும் இராமன். (அதனால்தான் காந்தியடிகளின் கனவு சமுதாயம் இராமராஜியம் எனப்பட்டது. காந்தியின் `ராம ராஜ்யம்' என்பதற்கு `‘மக்களும் அரசும் நேர்மையாக இருக்கின்ற ஆட்சி' என்பதே அவர் தரும் பொருள். காந்தியின் இராமன் ஒரு லட்சிய மனிதன், அயோத்தியில் பிறந்த வரலாற்று மனிதராக அவர் ஒருபோதும் கருதவில்லை. காந்தியின் ‘ஹே ராம்’ ஒருபோதும் பாஜக-வின் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமாகாது. மதத்தினை அன்பின்வழியில் அணுகுவதற்கும், ஆதிக்கத்தின் வழியே அணுகுவதற்கும் உள்ள முரண்பாடு அது.)
ஆனால் நரேந்திரமோடியின் ஆட்சின்கீழ் இந்தியாவில் இன்று என்ன நடக்கிறது? அவர்களுடைய செயல்திட்ட முன்னுரிமைகளில் மக்கள் எப்போதுமே கடைசியில் வைக்கப்பட்டுள்ளனர். பணக்கார முதலாளிகளுக்கு மேலும் லாபம் என்பதே, அவர்கள் வழிபாட்டின் மந்திர உச்சாடனம். கோடிக் கணக்கான இந்தியக் குடிமக்கள் பட்டினிக் கொடுமையில் பரிதவிக்கும்போது, இவ்வளவு கோடிக் கணக்கிலான ஆலய நிர்மாணத் திட்டத்தில் செலவிடுவதைக் கடவுள் ஆசிர்வதித்து அனுமதிப்பாரென எந்த உண்மையான இராமபக்தரும் நம்புவாரா? புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும் உறைவிடமும் வழங்கத் தன்னிடம் நிதி இல்லை என்று கைவிரிக்கும் அரசு, இந்த நேரத்தில் தன்னுடைய பெயரில் ஆலயம் கட்டக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்வதை நிச்சயம் ஸ்ரீராமர் ஒப்புக்கொள்ளவே மாட்டார்.
எனவே இராமாயண மகாகாவியத்தின் ஸ்ரீஇராமர் பால் உண்மையான பற்று இருக்குமானால், நரேந்திரமோடி அயோத்திக்குச் செல்லும் திட்டத்தை ரத்து செய்வதுடன், இப்போது ராமர் கோயில் கட்டும் திட்டத்தை உடனடியாக முழுமையாக மறுபரிசீலனைச் செய்ய வேண்டும். ஸ்ரீராமரின் மீதுஉண்மையான நம்பிக்கையுள்ள பெரும்பான்மையினர் ஸ்ரீராமரின் போதனைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இல்லையெனில், அதிகாரத்தைத் தேடிஓடும் இராவணப் பேராசைக் கும்பல், சூழ்நிலையைக் கைப்பற்றுவதுடன் ஏழை எளியவர்கள்பால் அவர்களுக்குள்ள இரக்கத்தையும் அக்கறையையும் சர்வநாசம் செய்துவிடும்.
காஞ்சி மன்னன் காடவர் கோன் கட்டிய கற்கோயில் கும்பாபிஷேகத்திற்கு வராத இறைவன், பூசலார் கட்டிய மனக்கோயிலில் குடிபுகுந்ததைப் பெரியபுராணம் பேசும்.
 கவியரசு கண்ணதாசன் பாடலில்,
“ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்
 ஆண்டவன் விரும்புவதில்லை;
 இசையில் கலையில் கவியில் மழலை
 மொழியில் இறைவன் உண்டு”
‘தெய்வம் இருப்பது எங்கே’ என்ற உண்மையை உரத்துக் கூறி, செய்ய வேண்டியதையும் சொல்கிறார்:
“இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்
 ஏற்கும் உனது தொண்டு! ”

பாஜக சங்பரிவார் கூட்டம் இதனை உணர வேண்டும்,இல்லையேல் நாட்டின் நல்நம்பிக்கையாளர்கள் உணர்த்த வேண்டும்!

--தமிழில் : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்

Sunday 26 July 2020

பொதுத் துறைகள் பற்றி தோழர் பட்டாபி




“நவீன­இந்தியக் கோவில்கள் கட்டப்பட்ட வரலாறும்
இடிக்க நடக்கும் இன்றைய முயற்சிகளும்”

          24 இரவு முகநூல் நேரலையில் “இன்றைய அரசும் பொதுத்துறையும்” என்ற தலைப்பில் தோழர் பட்டாபி      ஆற்றிய உரையின் சுருக்கம்.                    நிகழ்ச்சிக்கு CPI திருநெல்வேலி              மாவட்டக் குழு முகநூல் ஏற்பாடு செய்திருந்தது.
        “மூத்த தோழர் காசி, மாவட்டச் செயலாளர் ரங்கன் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். தலைப்பிற்குள் செல்லும் முன் பொதுத் துறை குறித்த சில செய்திகள். இந்தியப் பொருளாதார மாற்றத்தை விரைவு படுத்த, பல்வேறு பகுதி மக்களுக்கும் பொருளாதாரப் பயன்களைப் பகிர்ந்தளிக்கப் பொதுத் துறைகள் மூலம் முயல்வது என்பது விடுதலைக்கு முன்பே இருந்த கனவு. அப்போது பல முரண்படும் பொருளாதாரக் கோட்பாடுகள் இருந்தன என்பது உண்மையே. காந்திஜியின் கிராம நிர்மாணப் பொருளாதாரத் திட்டம், தோழர் எம்என் ராய் முன் வைத்த இந்தியப் பாதை, 1948களிலேயே சோஷலிஸ்ட்டுகளின் தனியான கருத்துகள் இருந்தன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத வரைவுக்குழுவிற்கு ஜவகர்லால் நேரு, காரிய சாத்தியமான இலக்குகளை நிறைவேற்றல் என்ற அரசியலமைப்பிற்கான நோக்கத் தீர்மானத்தை முன் வைத்தார். பின்பு அதன்அடிப்படையில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெருமக்கள் பெரும் உழைப்பில் வரைந்தளித்த அரசியலமைப்புச் சட்ட Preamble எனும் நோக்க நுழைவாயிலின் ஆன்மாவானது நேருவின் தீர்மானம். விடுதலை அடைந்த நாட்டின் பிரதமர் பொறுப்புக்கு நேரு, பட்டேல், ராஜாஜி இவர்களில் யார் என்ற கேள்விக்கு நேருவே என காந்தி தீர்வு தந்தார்.
        நேருவின் தலைமையிலான அரசு பொருளாதார மாற்றங்களைப் பொதுத்துறை வாயிலாக நிறைவேற்ற, காங்கிரஸ் கட்சிக்குள் விவாதித்து முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே 29 கோடி ரூபாய் முதலீட்டில் 5 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. அதன் பயணம், யாத்திரை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து 1991ல் உச்சம் தொட்டன. ராஜீவ் காலத்தில் சற்று தடுமாறியது. இந்திரா ஆட்சியில் எவ்வளவு அரசியல் விமர்சனங்கள் வந்தாலும் 1969 வங்கிகள் தேசியமயத்தின் மூலம் உச்சம் தொட்டது.
        ஆண்டு தோறும் பொதுநிறுவனங்களின் இலாக்கா எனப்படும் DPE, பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி, அவற்றின் லாப—நஷ்டங்களை விவரித்து, சர்வே ஆய்வு அறிக்கையை வெளியிடும். 2018—19ம் ஆண்டிற்கான அறிக்கை 2020 பிப்ரவரியில் வெளியானது. அதன்படி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 348 பொதுத்துறை நிறுவனங்களில், கட்டுமானநிலையில் உள்ள 86 மற்றும் வழக்கொழிந்தவை 13 நிறுவனங்கள் போக, மற்றவற்றில்  முதலீடு 16.5 லட்சம் கோடிஎன ராட்சச வளர்ச்சி அடைந்துள்ளன.
        பொதுத்துறை நிறுவனம் என்றால் என்ன என்பதைக் கம்பெனிகள் சட்டம் 1956, திருத்தப்பட்டு 2013 சட்டம் வரையறுத்தபடி தற்போது 51% அரசு மூலதனம் உள்ள நிறுவனம் (முன்பு இந்த சதவீதம் கூடுதலாக இருந்திருக்கலாம்) பொதுத்துறை நிறுவனமாகும். அரசின் நிதித்துறை நிதி கிடங்கிற்குப் பொதுத்துறை நிறுவனங்கள் டிவிடென்டுகள், லாபத்தில் ஈவுத் தொகை, கடன், கார்ப்பரேட் வரி, விற்பனை வரி, ஜிஎஸ்டி வரி முதலியவை மூலம் பங்களிப்புச் செய்கின்றன. நாட்டின் மொத்த பட்ஜெட் நிதி செலாவணி ரூ20 லட்சம் கோடி எனில், அதில் மூன்றரை லட்சம் கோடி, அதாவது 17% பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பாகும். அதுதவிர எஸ்சி/எஸ்டி/ஓபிசி இடஒதுக்கீடுகளை வழங்கி வேலை வாய்ப்பு அளித்தல் முதலிய அரசின் சமூகக் கடப்பாடுகளை நிறைவேற்றி வருகிறது. மேலும், நாட்டின் உற்பத்தியில் சுயதேவை பூர்த்தி, பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட், விலைகொள்கைகளில் நிலைத்தன்மை, சந்தைவிலையில் நிதானம் கொண்டுவர என பலவகைகளிலும் உதவுகிறது. இதுவரை பொதுத்துறைகள் சமூகக் கடப்பாடு நிறைவேற்றல் கடமையில் மங்காது இருக்கிறது. மேலும், ஆண்டுதோறும் 18சதவீத வளர்ச்சியும் 26 லட்சம் கோடி வரவுசெலவு (வியாபார விற்றுமுதல்) என லாபத்திலும் 15% வளர்ச்சி கண்டு வருகிறது. மொத்தத்தில் நாட்டின் (good economics) நல்ல பொருளாதாரத்திற்கு உதவிகரமாக பொதுத்துறைகள் உள்ளன.
        DPE அறிக்கையில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், நிலக்கரி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் என லாபம் ஈட்டும் 10 டாப் நிலையில் உள்ள நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 248 நிறுவனங்களில் 178 லாபம் ஈட்டுவன. அவற்றில் மேற்கண்டவை மட்டுமே 62% லாபத்தை ஈட்டித்தர மற்றவை அனைத்தும் சேர்த்து 38% லாபம் தருகின்றன.
        அதே போல  நட்டம் அடையும் 70 நிறுவனங்களில் டாப் 10. இதில் எங்களுடைய BSNL, MTNL மற்றும் ஏர் இந்தியா மூன்று மட்டுமே 82% நட்டத்தைத் தருகின்றன. பங்கு விற்பனைக்குப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக 56 கம்பெனிகள் உள்ளன.
அரசு செய்தது என்ன? செய்யப் போவது என்ன?
        நிறுவனங்களின் நோயுற்ற தன்மையை sickness நிலைமையை ஆராய முன்பு BRPSE ’பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான போர்டு’ இருந்தது. நலிந்து வரும் நிறுவனங்களை ஆராய்ந்து மறுசீரமைக்க, புத்தாக்கம் செய்ய எடுக்க வேண்டிய பரிந்துரைகளைத் தரும் அந்த போர்டை மோடி ஆட்சிக்கு வந்ததும் கலைத்து விட்டார். போர்டுக்குப் பதில் அந்தந்த நிறுவனங்களின் அமைச்சக நிர்வாகப் பிரிவே ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்றது. அதன்படி நலிவடைந்த நிறுவனங்கள் புத்தாக்கம் பெறலாம், தனியார் பங்குதாரர்களைச் சேர்க்கலாம், பங்கு விற்பனை அல்லது முற்றாக மூடி விடுதல் என்ற முடிவுகளையும் எடுக்கலாம் என்றானது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு  அரசின் கொள்கை முடிவு வழிகாட்டுதல்களை மட்டுமே DPE வழங்கும் என்றது. அப்படி 9-11-2015ல் DPE வெளியிட்ட ஆவணம் முக்கியமானது, குறிப்பாக நட்டமடையும் 70 பொதுத்துறைகளில் செயல்படும் தொழிற்சங்கங்களுக்கு முக்கியமானது.
நட்டமடையும் 70 பொதுத்துறை நிறுவனங்களில், லாபமில்லாததால் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றமில்லை, அது சங்கங்களுக்கும் ஊழியர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் பிரச்சனையாகிறது. ஆனால்  அரசு ஊழியர்களுக்கு அவ்வாறு இல்லை. சம்பளக்குழு மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியமாற்றம் கிடைக்கிறது.
 தற்போதைய மோடி அரசின் background, இந்த மாற்றங்களுக்கான கொள்கை பின்புலம், தத்துவத் தொடர் சங்கிலி என்ன எனப் பார்க்கலாம்:
எக்கனாமிக் நேஷனலிசம் – பொருளாதாரத் தேசியவாதம் -- என்பதே அடிப்படை. 1951 அக்டோபர் 21ல் சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய ஜனசங்கத்தின் கொள்கைஜனசங்கத்தின் பொதுச் செயலராக அப்போது இருந்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா. அவர் இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். அவரின் பொருளாதாரக் கருத்துகளே ஜனசங்கத்தால் பின்பற்றப்படுகிறது.  
 (ஜனசங்கம்1951 முதல் 72வரை செயல்பட்டு, பின் ஜனதா கட்சியோடு இணைந்து அதுவே பின்னர் 1980ல் பாரதிய ஜனதா கட்சியானது.) ஜனசங்கம் தொடங்கி வெள்ளிவிழா கொண்டாடும் முன் தங்களது பொருளாதார, அரசியல், சமூகப் பார்வையைத் தொகுத்து மூன்று தொகுதிகள்  வெளியிட்டனர். இரண்டாவது தொகுதியில் 1951முதல் 72வது ஆண்டுவரையான பொருளாதாரத் தீர்மானங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாகக் கூறப்படுவது,1) கொள்கையில் இறுக்கம், வரட்டுத்தனம் இருக்காது  2) இந்தியத் தன்மை அல்லாதவற்றை –unIndianness—எதிர்ப்பது 3) கேப்பிடலிசம் –முற்றிலும் சுதந்திரமான வர்த்தகத்தை-- எதிர்ப்பது (இதுவும் அவர்கள் சொன்னதுதான்; அப்போது நேரு கலப்புப் பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தினார். அதுவும் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சோவியத்தின் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த பிறகு) ஆனால் ஜனசங்கத்தினர் அந்த சோவியத் பாணியை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றனர். எங்களுடையது மூன்றாகப் பிளவுபட்ட அணுகுமுறை. அதாவது 1) உற்பத்தி பெருக்கம் 2) சமமாகப் பகிர்ந்தளித்தல் 3) நுகர்வில் சுயகட்டுப்பாடு, ஏனெனில் மேற்கத்திய நாகரீகம் போல உலகப் பொருட்களில் (அதீத) நுகர்ச்சி அல்ல இந்தியக் கலாச்சாரம்.
1955ல் தெங்கடி (தந்தோபந்த் பாபுராவ் தெங்கடி) BMS  பாரதிய மஸ்தூர் சங்கம் என்னும் தொழிற்சங்கப் பிரிவைத் துவக்கினார். அடிப்படை கொள்கை கேப்பிடலிசம், கம்யூனிசம் இவற்றிலிருந்து விலகி இருப்பது. தேசம் பற்றிய சிந்தனையோடு செயல்படுவது, தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது நோக்கம். 1960களிலேயே அவர்கள் தங்களை வெளிப்படுத்தி விட்டனர். அப்போதே பொதுத்துறை நிறுவனங்களை விரிவாக்காதீர்கள், பெருக்காதீர்கள், தேவையில்லை மேலும் பொதுத்துறைகள் என்று கூறியதோடு தனியார் பிரிவுகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அரசை வற்புறுத்தினர். 1967ல் நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பு பிரிவுகள் அனைத்தையும் தனியார் வசம் விட்டுவிட வேண்டும்; ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி R & D பிரிவுகளை அரசே முழுமையாக மேற்கொள்ள வேண்டியதில்லை, தனியார் நிறுவனங்களும் அதில் ஈடுபட அரசு போதுமான உதவி செய்ய வேண்டும் என்றனர்.
1969ல் இந்திராகாந்தி வங்கிகளைத் தேசியமயமாக்கியபோது, அவர்களின் இந்தக் கொள்கை நிலைபாடுகளெல்லாம் பூரணமாக வெளிப்படையானது. வங்கி தேசியமயத்தை எதிர்த்தது மட்டுமின்றி  இந்திரா அரசியல் காரணங்களுக்காக, அரசியல் பொருளாதார ஏகபோகம் என்ற ஆதாயத்திற்காகத் தேசியமயமாக்குகிறார் என்று விமர்சனம் செய்தனர்.
BMS தலைவர் தெங்கடி வெளியிட்ட சிறுபிரசுரத்தில் ஸ்டேட் (அரசு) வேறு, Nation (தேசம்) வேறு. இந்திரா வங்கிகளை அரசுமயப்படுத்துகிறாரே தவிர, தேசியமயப்படுத்தவில்லை என வியாக்யானம் தந்தார்.
2004ல் மத்திய ஆட்சியை விட்டு போகும்போது வாஜ்பாய் (BJP துவங்கிய) 1980 முதல் 2004 வரை நாங்கள் என்ன செய்தோம் what we did என்ற ஆவணத்தைக் கொண்டு வந்தார். அதில் நேரு, நரசிம்மராவ் பொருளாதாரக் கொள்கைகள் விமர்சிக்கப்பட்டன. அதற்கு மாறாக வாஜ்பாய், நாங்கள் 1) தேச பக்தியை முன்நிறுத்துவோம் 2) இயந்திரமயத்தைக் குறைத்து உற்பத்தியில் தொழிலாளர்களை அதிகப்படுத்துவோம் 3) நாட்டை தொழில்மயப்படுத்துவோம்        என்று கூறி எதிர்காலத் திட்டங்களாக இந்தியாவை கிராமமயப்படுத்துவது (Ruralisation), தொழில்மய, தொழிலாளர்மயப் படுத்துவது,  தொழிலாளர்கள் கையில் மூலதனம் வரச்செய்தல், மூலதனக் குவிப்பைத் தடுத்தல் எனப் பட்டியலிடுகின்றது.
1991ல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் வந்த பிறகான 10 ஆண்டு கால ஆட்சியை, விபி சிங் உட்பட, ‘முடை நாற்றத்தின் 10 ஆண்டுகள்’ எனக் கடுமையான விமர்சனம். நாற்பது ஆண்டு காலப் பொதுத் துறைகளால் பலன் ஏதும் விளையவில்லை; மாறாக, அது அரசு பணத்தை விழுங்கும் வெள்ளை யானை white Elephant . மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர், மக்கள் அன்னியப்படுத்தப்பட்டனர் என்றெல்லாம் கூறி,  எனவே நாங்கள் அதனை மக்களுக்குத் திறந்து விடுவோம். பொது மக்களிடம் சேருமாறு பங்குகளை விற்போம்; எந்தத் தனிநபருக்கும் 5 சதவீதத்திற்கு அதிகமான பங்குகளைத் தரமாட்டோம். ஆமாம், அப்போது 1991 தீர்மானத்தில் அவர்கள் சொன்னது, 5%கும் அதிகமான பங்குகளைத் தனியாருக்குத் தர மாட்டோம் என்று. ஆனால் இப்போது மோடி ஆட்சியில் நிலைமைகள் தலைகீழானது வேறு விஷயம்.  அரசுமயப்படுத்தப்பட்டவைகளை அரசின் பிடியிலிருந்து விரைவாக நாங்கள் விடுவிப்போம், de-governmentalisation எங்கள் கொள்கை . வெளிநாட்டு முதலீடுகளை FDI நம்பி ஒரு நாடு இருக்க முடியாது – இதைச் சொன்னதும் பாஜக தான் 1992 ஆகஸ்ட் தீர்மானத்தில். சுதேசியை, தாராளமயத்துடன் கூடிய சுயசார்பைக் கொண்டு வருவதே எங்கள் கோட்பாடு என்றனர்
        1995ல் கூறியது பெரும் அதிர்ச்சி தருவது, நேரு மாடல் bad மோசம், நரசிம்மராவ் worst மோசத்தின் உச்சம் என்று விமர்சித்து, நாங்கள் மக்களையும் நாட்டையுமே முன்நிறுத்துவோம்; மக்களும் சந்தையுமே எங்கள் எதிர்காலத் திட்டங்களில் முக்கியம் என்றனர்.
2000க்கு பிறகு
        ஆகஸ்ட் 2000ல் மையப்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை பரவலாக்குவது, டி-சென்ட்ரலைஸ் செய்வது என்றும், 21ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை முன்னேற்றுவதற்கான திட்டம் என்ற ஆவணத்தை கொண்டு வந்தனர். ராவ், மன்மோகன் காலத்திலேயே வந்து விட்ட பங்குவிற்பனை வேகம் போதாது. பங்குவிற்பனை இல்லாமல் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என்றவர்கள் கொண்டு வந்த முக்கியமான மாறுதல், பங்கு விற்பனைக்கான இன்ஸ்ட்ருமெண்ட் (வழிமுறைகள்) ஆகும். 
2014ல் மோடி வந்த 6 ஆண்டுகளில் அவர்களின் பொருளாதாரக் கோட்பாடு ‘தேசியப் பொருளாதாரப் பார்வை’ எப்படியெல்லாம் மாற்றிப் பேசுகிறார்கள். 50 ஆண்டுகளாக இருந்த திட்டக்குழுவைக் கலைத்து, நிதிஆயோக் கொண்டு வந்தார். கிராமிய அடிப்படைஎன்பது மெல்ல தாலுக்கா, மாவட்டம், மாநில அளவில் மாற்றத்திற்காகத் திட்டமிடுதல் என மாறிப் போகிறது. அன்னிய நேரடி மூலதனம் FDI நம்பி ஒரு நாடு இருக்க முடியாது என்றவர்கள், டாக்டர் அரவிந்த் மாயாராம் குழுவை அமைக்கின்றனர்.  அந்தக் குழு FDI ல் சீர்திருத்தம் வேண்டும், அப்போதுதான் அன்னிய மூலதனம் விரைவாக வரும் எனப் பரிந்துரைக்கிறது.
அதற்காகக் காத்திருந்தவர்கள் போல உடனடியாக மோடி கட்டுமானத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கிறார். முன்அனுமதி தேவையில்லாத வழியில் ஆட்டமேட்டிக்காக அரசு ஒப்புதல் அளிக்கும் வழிமுறை Foreign Portfolio Investment (FPI) முன்பே இருந்தது. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அந்த முன்னனுமதி தேவையில்லை எனச் சிவில் விமானப் போக்குவரத்து ஏர் இந்தியாவில் மாறுதல் கொண்டுவந்தார். தவிர முன் அனுமதி தேவைப்படும் துறைகள், உதாரணத்திற்குப் பாதுகாப்பு, தொலைபேசி, மருந்து தயாரிப்பு பகுதிகளில்கூட ஒப்புதல் வழங்க FIPB (The Foreign Investment Promotion Board ) தனி அமைப்புகளை உருவாக்கினார். தற்போது ஏர் அத்தாரிட்டியிலும், காப்பீட்டுத் துறையிலும் FDI முதலீட்டின் உச்சவரையறை உயர்த்தப்பட்டுள்ளது;  தனியார் வங்கிகளில் 74%, பெட்ரோ கேஸில் 49%, எப் எம் ரேடியோ, சில்லறை விற்பனை எங்கும் FDI.
.2020, ஜூன் 19ல் முக்கிய அறிவிப்பு. PFRDA (Pension Fund Regulatory and Development Authority) மூலம் பென்ஷன் நிதியத்தில் பென்ஷன் எஜென்சிகளை, அவை FDI முதலீடு பெறுவதை ஒழுங்குபடுத்தும் என்றனர். இது அபாயகரமான சிக்னலாகப் பார்க்கிறோம்.   பாதுகாப்புத் துறையில் FDI அதிகபட்சம் 26% மட்டுமே என முன்பு இருந்ததை 74சதவீதமாக உச்சவரம்பை உயர்த்தி விட்டனர். தனியார் துறைக்கு முதலீடு கிடைக்க வழி செய்யவதற்கான ஏற்பாடுகள் இவை. (இதனால் இராணுவ உற்பத்தித் தளவாட பொதுத்துறை ஆர்டனஸ் பேக்டரிகள் பாதிப்படைந்து உற்பத்திப் பிரிவுகள் சிலவும் மூடப்படுகின்றன. அந்தப் பிரிவு தொழிலாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.)
தீபம் என்பது இன்னொரு வழிமுறை (இன்ஸ்ட்ரூமெண்ட்). DIPAM (Department of Investment and Public Asset Management) இலாக்காவின் நோக்கம் தனியார் நிறுவனங்கள் பொதுத்துறைகளில் பங்கேற்று (Public Private Participation) பொதுத்துறைகளில் சொத்துரிமை பெற உதவுவது என வரையறுத்து, அதனைப் பங்கு விற்பனை மூலம் செயல்படுத்துகின்றனர். அதன்படியே டெலிகாமின் நிலச் சொத்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பல நிறுவனங்களிலும் உபரி நிலம், காலி நிலம் எவ்வளவு என்பதை நிதிஆயோக் கணக்கிடுகிறது.
தனியாருக்கு ஆதரவாகப் பங்கு விற்பனை அதிகரிப்பது அரசின் திட்டம். மோடி வந்த பிறகு 5 ஆண்டுகளில் 2020 மார்ச் முடிய பங்கு விற்பனை மூலம் 4.3 லட்சம் கோடி திரட்டுவது என்பது இலக்கு. பொதுவாக இலக்கில் ஒரு பகுதி அளவே எட்டுவது நடைமுறையாக இருக்க, 2019 மார்ச் மாதம் முடிய 2.7 லட்சம் கோடி ரூபாய் அரசின் கைக்கு வந்துவிட்டது. அதாவது, பொதுத்துறையின் 16 லட்சம் கோடி சொத்துக்களிலிருந்து 2.7 லட்சம் கோடியை அரசு உருவி எடுத்து விட்டது. இந்த அரசு 100 சதவீத பங்குவிற்பனை இலக்கை நிறைவேற்றியது.  BPCL, HPCL போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் சட்டப்படியான பங்குதாரர் இணைப்பு (Statutory Partner) வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஏனெனில் அந்நிறுவனங்களில் 51% மேலும் பங்கு விற்பனை செய்ய சில சட்டத் தடைகள் உள்ளன. 2003ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையானது.
நேரு, இந்திரா ஆட்சி காலத்தில் நிறுவனங்களைத் தேசியமயமாக்கச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மோடி காலத்தில் சட்டம் தடையாக உள்ளதென்று, legal barrierகளை அகற்றச் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் என்ன நடக்கிறது என்பது குறித்த அறிக்கைகள் தஸ்தாவேஜூகளை அரசு வெளியிடுகிறது. அதைப் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை எனில் அது நமது தொழிற்சங்கங்களின் தவறே ஆகும்.
இப்போது ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு) கொண்டு வரப்படும்போது, பொதுத்துறைகளைத் தனியார்மயப்படுத்துவதே கொள்கை என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 மே 17ல் அறிவித்தார். விரிவான விபரங்கள் இனிதான் வர வேண்டும்.  எது கேந்திரமான தொழில் பகுதி என்பதை நிதிஆயோக் முடிவு செய்யும். அதாவது அந்தப்பகுதிகளில் நேரடியாகத் தனியார் மயம் வராது; ஆனால் தாராளமயம், லிபரலைசேஷன் கொண்டுவரப்படும், (முன்வாசல் வழியே அல்லாமல் பின்வாசல் வழியே வரும், அவ்வளவுதான் வித்தியாசம்.)
பலதுறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 குறுங்குறிகளாக (Code) மாற்றப்படுவது தனி. காப்பீட்டுத் துறையில் திருத்தச் சட்டம் 2015 – காப்பீட்டு கம்பெனிகள் இணைப்பு, ஜெனரல் இன்ஷுரன்சில் வர்த்தகம் 70% செய்தால் போதும் என்ற மாறுதல்.  ஆனால் LICல் LICசட்டத்தை மாற்ற வேண்டியிருப்பதால் அதனை  IPO (Initial public offering) மூலம் திறந்து விடுதல், அதாவது பிற நிறுவனங்களை ‘துவக்க விலை பங்குகளை’ வாங்க அனுமதிப்பது.
FCI இந்திய உணவுக் கார்பரேஷனில் என்ன் நடந்தது? 2015ல் சீர்திருத்தக் கமிட்டி அமைத்தார்கள். அக்குழு இந்திய உணவுக் கார்பரேஷனே ஏன் எல்லா தானியங்களையும் கொள்முதல் செய்ய வேண்டும், ஏன் ஸ்டாக் வைக்க வேண்டும்? ஏன் உணவுக் கழகமே அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். தனியார் சேமிப்புக் கிடங்குகளை அனுமதிக்கலாம். FCIன் பணியின் பங்கு இப்படி விரிவானதாக இல்லாமல், தேவை உள்ள மாநிலங்களுக்கு ஸ்டாக்கை அனுப்புவதோடு தங்கள் பணியை வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்றது. அப்படிச் செய்தால்தான் தனியார் துறை இதில் பங்கேற்க இடம் கிடைக்குமாம். உணவு பாதுகாப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்தது. 67 சதவீத மக்களுக்குப் பயனளித்ததை 40 சதமாகக் குறைத்துள்ளனர். பயனாளிகளுக்கு எவ்வளவு உர மானியம் தரவேண்டுமோ அதை அரசே அவர்கள் கணக்கில் நேரடியாக வங்கியில் செலுத்தும் முறை (Direct Fund Transfer). அதன் பொருள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயவிலை கடைகள் மூலம் மாநில அரசுகள் வழங்குவது போலச் செயல்படத் தேவையில்லை, மக்கள் தனியாரிடம் பெற்றுக் கொள்வார்கள்; அரசு மானியத் தொகையை மட்டும் அளித்தால் போதும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து இங்கு பேச நேரமில்லை.
எலெக்ட்ரிசிடி திருத்தச் சட்டம் 2014 மற்றும் மீண்டும் 2020 ஏப்ரல். தமிழ்நாட்டின் சமூகநலத் திட்டமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்  பறிபோகும் நிலை. இச்சட்டத்தின்படி ஏற்கனவே மின் உற்பத்தி, மின் பராமரிப்பு, மின் விநியோகம் தனித்தனி அமைப்புகளாக்கப்பட்டு விட்டன. இந்த ஏற்பாட்டிற்குக் காரணம், மாநில அரசுகளே எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை. பிறகு யார் செய்வார்கள்? இருக்கவே இருக்கிறார்கள், தனியார் பரோபகாரி முதலாளிகள், சப்-ஏஜெண்டுகளாகப் பங்கேற்க. இங்கும் விவசாயிகள் உட்பட மானியம் யாருக்குத் தரவேண்டுமோ அந்த மானியத் தொகையை மாநில அரசு முன்கூட்டியே கட்டிவிட்டால் மத்திய அரசு, பயனாளிகளுக்கு நேரடி வங்கிக் கண்க்கில் மாற்றி விடும். அதேபோல மின்சாரத்திற்கு எல்லா நேரத்திற்கும் ஒரே மாதிரியான கட்டணம் விதிக்கக் கூடாது; மாறாக, Peak hour என்று சொல்லப்படும் அதிக உபயோகமுள்ள காலத்திற்கு ஒரு விலை விகிதம், அதிகம் தேவையில்லாத காலத்திற்கு ஒரு கட்டணம். வியாபாரத்திற்கு ஒரு மாதிரி, வீட்டிற்கு வேறு. (அப்படியே விமானப் பயணம், இரயிலில் டைனமிக் விலை கட்டணம் போலவே எல்லா இடத்திலும் வியாபாரம்). மத்திய மாநிலப் பொதுப்பட்டியலில் இருக்கும் மின்சாரத் துறையில், மாநில அரசு அரசுகளை அதிகாரமற்றவைகளாக மாற்றும் முயற்சி.
அட சாதாரண ஏழை மக்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தும் மண்ணெண்ணையைக் கூட  பொதுவினியோகத் திட்ட கெரசின், PDS அல்லாத பயனாளர்களுக்கான கெரசின் எனப் பிரிக்க வேண்டுமாம். மக்களுக்குத் தரப்படும் மானியத்தை வெட்டுவதே ஒரே நோக்கம்.
அடுத்து நிலக்கரி,  அதில் நிலக்கரி வயலை ஏலம் எடுத்த தனியார் எப்படி வேண்டுமானாலும் நிலக்கரியைப் பயன்படுத்த அனுமதி. ஏர் இந்தியா (இப்போதே 6 விமான நிலைய பராமரிப்பு அதானியிடம் அளிக்கப்பட்டு விட்டது) மேலும் அதன் கடனை ஒரு ஹோல்டிங் கம்பெனியை ஏற்படுத்தி கடனை உறைய வைத்து, நிறுனத்தை மட்டும் தனியாரிடம் விற்கவும் ஏற்பாடு. இரயில்வேயில் 109 வழித்தடங்களில் தனியார் இரயில்கள் விட ஏற்பாடு. வங்கியில் சீர்திருத்தம், வங்கிகள் இணைப்பு என்பதுபோய் தற்போது வங்கிகள் தனியார்மயம் எனப் பேசுகிறார்கள். அதற்கேற்ப வங்கிகள் செயல்பாடு, உலகத் தரத்தில், உதாரணமாக ஒரு தொலைபேசி அழைப்பில் கடன் பெறுவது Loan on Call என்றெல்லாம் ‘வங்கிச் செயல்பாடு’ என இனிக்கப் பேசுவதைக் கேட்கும்போது வாராக் கடன் சுமையால் பொதுத்துறை வங்கிகள் தள்ளாடுவதும், உலகத் தரத்தில் தொலைபேசி சேவை என்று தனியாரை அனுமதித்துவிட்டு, தற்போது BSNLம் MTNLம் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிப்பதுமே கண்முன் வருகிறது.
அடுத்து லேபர் சீர்திருத்த மாற்றங்கள். நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து சீர்திருத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. முதலாவது Wage Code எனப்படும் ஊதியக் குறுங்குறி மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாகி விட்டது.  நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அந்த மசோதாவைப் பரீசிலித்த நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. 8மணி வேலை நேரம் என வரையறுக்கப்பட்டதை மாற்றி நெகிழ்வுப் போக்குள்ள பணிநேரம் என்று மாற்றி விட்டனர். சில மாநில அரசுகளும் பணி நேரத்தை 12மணிவரை அதிகரித்து அவசரச்சட்டம் கொண்டு வந்தன; சில அரசுகள் அதைத் திரும்பப் பெற்று விட்டன.
அடுத்து பணி இடப் பாதுகாப்பு குறுங்குறி மசோதா. 13 சட்டங்களை உள்ளடக்கிய இது தற்போது நிலைக்குழுவின் பரிசீலினை முடித்து அவர்களும் திருத்தங்களோடு அறிக்கை தந்து விட்டனர். பாராளுமன்றத்தில் இது விவாதத்திற்கு வந்து சட்டமாக வேண்டும். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எந்தெந்தச் சட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்? பழைய சட்டங்களில் இருந்த எவை எல்லாம் எப்படி மாற்றப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன என்பதை விரிவாக – குறைந்தபட்சம் தலைவர்கள் – படித்தறிய வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து போராடுவதற்கு ஊழியர்களைத் தயார்படுத்த முடியும். (தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்  பற்றி விரிவாக பட்டாபி முகநூல் பக்கம் pattabiwrites.in முகவரியில் உள்ளது)
        இனி தனியார்மயம் தீவிரமாகும். இறுதியாக அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை National Infrastructure Pipeline (NIP) ஆவணமாகத் தந்துள்ளனர். சாலை, மின்சாரம், கிராம மேம்பாடு கட்டமைப்பு ஏற்படுத்துவதில் தீவிரம் என்பது நோக்கம். பிரம்மாண்டமான பெருவிருப்பத் திட்டம் அது எனச் சொல்லலாம். 111 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டம். 39% மத்திய அரசு, 40% மாநில அரசுகள் மீதி 21% தனியாரிடமிருந்து  எதிர்பார்க்கின்றனர். அந்த 21% என்பது சுமார் 25 லட்சம் கோடிக்கானது. அதைப் பார்க்கும்போது இரயில்வேயில் 30ஆயிரம் கோடி தனியார் முதலீடு அளவில் சிறியது. இதில் 44 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஏற்கனவே செயல்படத் துவங்கிவிட்டன, 34 லட்சம் கோடி இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். தங்கள் திட்டங்களில் அவர்கள் தீவிரமாக உள்ளனர் என்பது தெரிகிறது.
பென்ஷனில் கடுமையான மாற்றங்கள் வர உள்ளன. பல நாடுகளிலும் ஓய்யூதியதாரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இனி எல்லா பொதுத் துறைகளிலும் சொத்து மேலாண்மை செய்யப்படும். காலி நிலம் என்பதற்கான வரையறையைச் சத்தமில்லாமல் மாற்றி விட்டனர். அன்று ஜனசங்கம் சொன்னதை, எந்தப் பெயரில் செய்தாலும், நிறுவனங்களை அரசின் பிடியிலிருந்து விடுவிப்பது, தனியார் துறையை விரிவாக்குவது, பொதுத்துறைகளை விற்பது குறைப்பது என்பதே அவர்களின் செயல் திட்டம்.
விழிப்பாக இருக்க வேண்டியது நமது பொறுப்பு, நமது கடமை. நன்றி”    
--தொகுப்பு : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்


Friday 24 July 2020

சரித்திரத் தலைவர்கள் வரிசை 6 தோழியர் பார்வதி கிருஷ்ணன்




நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் - 6
பார்வதி கிருஷ்ணன் : 
துடிப்புமிக்கத் தோழியர், தலைவர்

--அனில் ரஜீம்வாலே
(நியூஏஜ் ஜூலை 19 –25)
        ஆண்களின் உலகம் எனக் கருதப்பட்ட தொழிற்சங்க அரங்கம், மற்ற நடவடிக்கைகளில் துணிச்சலுடன் இறங்கி கலக்கிய அரிதான பெண்மணிகளில் ஒருவர் பார்வதி கிருஷ்ணன் (குமாரமங்கலம்). இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், ஏஐடியுசி தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
        1919 மார்ச் 15ம் நாள் ஊட்டியில் பிறந்தார் பார்வதி. சுதந்திரத்திற்கு முன் சென்னை இராஜதானியின் முதல்வராகவும், நேருவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்த டாக்டர் சுப்பராயன் அவருடைய தந்தை. மத்திய சட்டமன்றத்திற்கு 1938லேயே முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினரான ராதாபாய் அவரது தாய்.  (முதல் மற்றும் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணியான) அவருடைய தாயாரே பார்வதி அரசியலில் நுழையக் காரணமாவார். புகழ்பெற்ற காங்கிரஸ் அமைச்சரான மோகன் குமாரமங்கலம் அவருடைய சகோதரர். மற்ற இரு சகோதரர்கள் ஜெனரல் பரமசிவம் (P) குமாரமங்கலம் இராணுவப் படை முதன்மைத் தளபதி,  G குமாரமங்கலம் கோல் இந்தியா லிட் நிறுவனத்தின் தலைவராவார். அவர்கள் எல்லோரும் புகழ்பெற்ற ‘குமாரமங்கலம் ஜமீன்’ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். 5000 ஏக்கர் நிலம் அவர்களின் குடும்பச் சொத்தாக இருந்ததை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்து, அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வேறு வேறு துறைகளில் சிறந்து விளங்கினர்.
        புகழ்பெற்ற பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் வரலாற்றாசிரியரான எரிக் ஹாப்ஸ்பாவ்ம் (Eric Hobsbawm) தனது சுயசரிதமான “இன்டரஸ்டிங் டைம்ஸ்” நூலில் மறக்கவொண்ணா புகழ்பெற்ற இந்தக் குடும்பத்தைப் பற்றி ஆர்வத்தோடு விவரித்திருக்கிறார். தனது சகோதரர் மோகன் குமாரமங்கலத்தைச் சந்திக்க பார்வதி கிருஷ்ணன் லண்டன் கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 பல்கலைக்கழக மாணவராக இங்கிலாந்தில்
        பார்வதி பள்ளிப் படிப்பைச் சென்னை (மெட்ராஸ்) இவர்ட் பள்ளியில் நிறைவு செய்தபின், கேம்ரிட்ஜில் படிக்க இங்கிலாந்து அனுப்பி வைக்கப்பட்டார். நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்ய பிரிஸ்டனின் பாட்மின்டன் பள்ளியில் சேர்ந்து, பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1938ல் சேர்ந்தார்.
ஆக்ஸ்போர்டு ‘மஜ்லின்' என்ற அமைப்பின் மாணவர் செயலாளராகப் பார்வதி செயல்பட்டார். (‘மஜ்லின்’ என்ற பெர்ஷிய சொல்லிற்கு ‘அசம்பிளி’ என்பது பொருள். அந்தப் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது பழமையான மாணவர் விவாத அமைப்பு அது). ஃபெட்இண்ட் என்ற இதழ் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். (இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் இந்திய மாணவச் சமூகங்களின் சம்மேளனம் என்பது FEDIND –ன் விரிவாக்கம்.) இலண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வந்தார்கள். அவர்களில், என்.கே.கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, ஜோதிபாசு, மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, மொகித் சென் முதலானவர்கள் அதன் பிறகு கம்யூனிஸ்டாக மலர்ந்தவர்கள். பாசிசத்தை எதிர்த்த நேசநாடுகளின் மாணவர் குழுவில் பார்வதி இணைந்தார். ஜெனிவாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைக் கால முகாமில் கலந்து கொண்ட பார்வதி, குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திரா காந்தி அவருடைய நெருங்கிய தோழி, அது போலப் பின்னாட்களில் பிரபலமான பலரும் அப்போது அவருக்கு நண்பர்கள். 1930களில் பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்த ஸ்பெனினுக்கு உதவிட அமைக்கப்பட்ட சர்வதேச பிரிகேடு உள்பட பல குழுக்களிலும் பார்வதி பணியாற்றியுள்ளார்.  இரண்டாவது உலக யுத்தம் வெடித்ததும் முன்பு எப்போதும் இல்லாத அளவு போருக்கு எதிரான இயக்கங்கள் முகிழ்த்தன. பல கல்லூரிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி 1940ல் அமைக்கப்பட்ட ‘அமைதி குழு’விற்குப் பார்வதி தலைவரானார். அந்த அமைப்பு வெளியிட்ட இதழ் ஒன்றின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.
பாசிசத்தால் பழிவாங்கப்பட்டு கொடுமையாகப் பாதிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் ஆஸ்திரியா, ஜெர்மனி, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளின் அகதிகளுக்கு உதவிடப் பார்வதி நிவாரண நிதி திரட்டினார்.
        அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ‘தி ஸ்டூடன்ட்’ பத்திரிக்கையின் 1942 ஜூலை இதழில் ‘தேசியப் பாதுகாப்பில் பிரிட்டீஷ் மாணவர்கள்’ என்றொரு கட்டுரை எழுதினார். அதில் பிரிட்டனில் போருக்கும் பாசிசத்திற்கும் எதிராகப் பெருகி வரும் மாணவர் போராட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளார். மேலும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் பற்றிய அவர்களது அணுகுமுறையும் ஆராயப்பட்டுள்ளது. சோவியத் சோஷலிசக் குடியரசின் மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 50 சதத்திற்கும் மேலான மாணவர்கள் கையெழுத்திட்டனர்.  போர் எதிர்ப்பு பிரச்சார இயக்கங்களில்  தேசிய மாணவர்கள் சங்கம் NUS, பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் சம்மேளனம்(ULF) தீவிரமாக ஈடுபட, உலக இளைஞர் காங்கிரஸ் மற்றும் உலக மாணவர்கள் அஸோசியேஷன் அமைப்புகளும் கலந்து கொண்டன.
        பெரும்பான்மையான பிரிட்டீஷ் மாணவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்தனர் என்கிறார் பார்வதி. இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தப் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் சம்மேளனம் வெளியிட்ட சிறுபிரசுரம் 20ஆயிரம் பிரதிகள் விற்பனையாயின. இந்திய வாழ்க்கையைச் சித்தரிக்கும் போஸ்டர் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே மாணவர்கள் ’விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க, இந்தியாவை விடுவி’ என்ற பிரச்சாரத்தைத் துவக்கினர்.
இந்தியா திரும்புதல்
        1941 நவம்பரில் இந்தியா திரும்பினார் பார்வதி. அவர் வந்த கப்பல் இடையே தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. இனஒதுக்கலுக்கு எதிரான (ஆன்டி அபார்ட்தைட்) இயக்கத்தின் ஹெஏ நாய்க்கர், நாயுடூ, யூசுஃப் டாடூ போன்ற வீட்டுச் சிறைவைக்கப்பட்டிருந்த தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். எதிர்காலத்தில் சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பீட்டர் குன்னிமன் அவர்களை கொழும்புவில் சந்தித்தார்.
        ஆக்ஸ்போர்டிலேயே அறிமுகமான நிகில் சக்ரவர்த்தியைக் கல்கத்தாவில் சந்தித்தார். பின்னாட்களில் நிகில் சக்ரவர்த்தி புகழ்பெற்ற ‘மெயின் ஸ்டிரீம்’ வார இதழைத் துவக்கினார். பார்வதி டெல்லியில் இருந்த சிறிது காலம் அதன் மேலாண்மைப் பணிகளில் உதவினார்.
        கட்சி அவரிடம் தென்னக மாநிலங்களில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஏஐஎஸ்எஃப் அமைப்பைத் திரட்டும் பொறுப்பை அளித்தது. அவரும் சென்னை ராஜதானியின் குறுக்கும் நெடுக்குமான நீண்ட தூரங்கள் பயணம் செய்து அதற்காகக் கடுமையாக உழைத்தார். சேலத்தில் 1942 ஜூன் மாதம் நடைபெற்ற, மெட்ராஸ் மாகாண அளவிலானப் பெருமன்றத்தின், மாநாட்டின் வெற்றிக்கு அவரே முக்கிய காரணம். அந்த மாநாட்டில் என் கே கிருஷ்ணன், ஆர் உமாநாத், மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம் (பாலன்) போன்றோர் பங்கேற்றனர். ஆர் உமாநாத் பிரதேச மாணவர் பெருமன்றக் கிளையின் செயலாளர் ஆனார். மெட்ராஸ் பிரிசிடன்சி ‘சோவியத் யூனியன் நண்பர்கள்’ (FSU) அமைப்பின் மாநாடு மதுரையில் 1942 நவம்பரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் தலைமை, சக்ரவர்த்தி சி ராஜகோபாலச்சாரி (ராஜாஜி). அதன் முக்கிய அமைப்பாளராகச் செயல்பட்டவர் பார்வதி கிருஷ்ணன். மேலும் பல புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்ற மாநாட்டில் TV கல்யாண சுந்தரம் தலைவராகவும் பாலதண்டாயுதம் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1942ல் பார்வதி மாணவர் பெருமன்றத்தின் செயலாளராகவும், பின்னர் ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ (IPTA)வின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சி தலைமையகத்தில்
        சுதந்திரத்திற்கு முன்பே பார்வதி கட்சியின் முழுநேர ஊழியராகி, பாம்பேயில் கட்சி தலைமையக்த்தில் பணியாற்றினார். சிபிஐ பொதுச் செயலாளர் பிசி ஜோஷியின் தனிச் செயலாளரானார். கட்சியின் புகழ்பெற்ற தலைவர் என்கே கிருஷ்ணன் அவர்களை மிக எளிய விழாவில் வாழ்க்கை துணைவராக, ‘அவர் காரியம் யாவினும் கைகொடுத்து மாதர் அறங்கள் மாட்சிமை பெற’ மணமுடித்தார். எளிய விழா எனில், திருமண விழாவின் மொத்த செலவே இருபது ரூபாய்தான்! ஏஎஸ்ஆர் சாரி, மோகன் முதலிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். (பின்னர் தன் குழந்தை ‘இந்திரா’வுடன் 1944முதல் கம்யூனில் தங்கிய பார்வதிக்குத் தொடர்ச்சியாகக் கட்சிப் பணிகள் இருந்தமையால் கட்சி அலுவலகத்தில் இருக்கும் தோழர்களே இந்திராவை 5 வயதுவரை வளர்த்தார்கள். – 2019 பிப்ரவரி 20 விகடன் இதழிலிருந்து இணைத்தது). நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவருடைய மகள், இந்திராவுக்கும் திருமணம் எளிய முறையிலேயே நடந்தது. 1950களில் டெல்லியில் அந்தத் திருமண நிகழ்வின் மொத்த செலவு ரூ2000/= மட்டுமே! திருமணத்திற்கு வந்த தலைவர்களில் பண்டித நேருவும் ஒருவர்.
கலைஞர்களுடன்
        புகழ்பெற்ற கலை, பண்பாடு, இலக்கிய ஆளுமைகளான (எழுத்தாளர்) கைஃபி ஆஸ்மி, (1997ல் வாழ்நாள் சாதனைக்காக ஞானபீட விருது வழங்கப்பட்ட உருது இலக்கிய கர்த்தா) அலி சர்தார் ஜாஃப்ரி, பிருத்வி ராஜ் கபூர் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. பார்வதி அமைத்த ஒத்திகை நிகழ்வுகளில் அவர்களும் கலந்து கொள்வது வழக்கம். (இப்டா’வின் தந்தை எனப் போற்றப்படும் கலைஞரான) பால்ராஜ் சகானி மற்றும் (திறமையான நடிகையான) அவரது மனைவி தமயந்தி இருவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையச் செய்ததில் பார்வதி கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்தார்.
தலைமறைவு வாழ்வு
        1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது பார்வதி தலைமறைவு வாழ்வைத் தொடங்கினார். 1947ல் அவரது கணவரைக் கைது செய்யும்படி வாரண்ட் உத்தரவில் கையெழுத்திட்டவர் அவரது தந்தை. தமிழ்நாட்டில் சில மாதங்கள் தங்கிய பிறகு, பாம்பே சென்று கட்சியின் பொருளாளராகவும் ஏஐடியுசி-யின் ஆவணங்கள் ஒழுங்குபடுத்தும் மையத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். 1949 மார்ச் 9ம் தேதி இரயில்வே வேலைநிறுத்தப் போராட்ட அறைகூவல் தொடர்பாகப் போலீசார் அவரைக் கைது செய்ய முயன்றனர், ஆனால் அவர் பிடிபடாமல் தப்பி விட்டார்.
தொழிற்சங்க இயக்கத்தில்
ஏஐடியுசி தொழிற்சங்க மத்திய அமைப்பில் பணியாற்றுவதுடன் பார்வதி திருப்தி அடையாமல் நேரடியாகக் களப்பணி ஆற்ற விரும்பி, மெட்ராசுக்கு மாறினார். ஏஎஸ்கே ஐயங்கார் அவரை மெட்ராஸ் கார்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் முனிசிபல் ஊழியர்கள் மத்தியில் பணியாற்றக் கூறினார். தொழிற்சங்கவியல் பாடத்தை புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாரிடம் கற்றறிந்து, அந்தச் சங்கத்தின் செயலாளர் ஆனார்.
பார்வதி, என்கே கிருஷ்ணன் இருவரும் 1953ல் கோயம்புத்தூரை, முக்கியமாகத் தொழிற்சங்கப் பணியாற்றுவதற்காக, தங்கள் வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர். முக்கியமாகப் பார்வதி, தோட்டத் தொழிலாளர்கள், பீடி, ஜவுளி ஆலை இவற்றோடும் நீலகிரியின் பிற தொழிலாளர்கள், ஆனைமலை, பரம்பிகுளம் மற்றும் வால்பாறை பகுதிகளின் தொழிலாளர்கள் மத்தியிலும் தீவிரமாகப் பணியாற்றினார். தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது, 1957 ஜனவரி 26ல் வால்பாறை டீ எஸ்டேட்டில் நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் (குடியரசு நாளில் குடிமக்களுக்கு நல்ல பரிசு?). பார்வதியும் என்கே கிருஷ்ணனும் இப்போராட்டங்களில் முன்னே இருந்து போராடினர்.
இரயில்வே வேலைநிறுத்தம்  & மில் தொழிலாளர் போராட்டங்கள்
தனது வாழ்வின் இறுதிவரை, பார்வதி கிருஷ்ணன் கோயம்புத்தூர் மாவட்ட மில் தொழிலார்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். தொழிற்சங்க முன்னணி ஊழியர்களைப் பயிற்றுவித்து பல இளம் தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்கினார். பல சர்வதேசக் கருத்தரங்குகளில் ஏஐடியுசி மற்றும் சிபிஐ கட்சியின் சார்பாகப் பங்கேற்றதுடன்,  உலகத் தொழிற்சங்கச் சம்மேளனம் WFTU-ன் பொதுக்குழு உறுப்பினராகவும் திறமையாகச் சிறப்புடன் பணியாற்றினார். தேசிய இரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் NRWF-ன் தலைவரானார். இரயில்வே ஊழியர்களின் போராட்ட இயக்க தேசிய ஒருங்கிணைப்புக் குழு (NCCRS) வில் பார்வதியும் ஒரு உறுப்பினர். (ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்ளிட்ட) அந்தக்குழு முன்னின்று நடத்தியதே 1974ன் இரயில்வே வேலைநிறுத்தம்.  (மே 8 முதல் 27வரை இருபது நாட்கள் நடைபெற்ற அந்தப் போராட்டம், 17லட்சம் இரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்ட உலகின் மிக பிரம்மாண்டமான போராட்டம்). பார்வதி கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். ஊழியர்களுக்கான ஸ்டேட் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் உறுப்பினராக 1962முதல் 1970வரை இருந்தார். கோயம்புத்தூர் ஜவுளி ஆலைகளின் மையமாக மட்டுமின்றி பிற தொழிற்சாலைகளுக்கும் புகழ்பெற்ற நகரமாகும். பார்வதி கிருஷ்ணன் பெரும்பகுதி காலம் அந்தப் பகுதியின் தொழிற்சங்க இயக்கங்களிலேயே பாடுபட்டார். அறுபது ஆண்டுகளுக்கும் மேல் தொழிற்சங்கங்களிலும் பொது வாழ்விலும் அர்ப்பணித்த அவருடைய சேவைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏஐடியுசி பாராட்டு விழா எடுத்தது.
இங்கிலாந்து சர்வதேச பிரிஹேடு குழுவின் தன்னார்வத் தொண்டர்களோடு எவ்வளவு சகஜமாகவும் சிரமமின்றியும் உரையாடுவாரோ அப்படி அத்தகைய நெருங்கிய இயல்பாய் டெக்ஸ்டைல் தொழிலாளர்களோடும், வால்பாறை டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரோடும் சுலபமாகப் பேசி உரையாடக் கூடியவர் பார்வதி கிருஷ்ணன்.
டெக்ஸ்டைல் போராட்டமும், ஆலைகள் நாட்டுடைமையும்
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் (டெக்ஸ்டைல் ஆலைகளுக்குப் பெயர்பெற்ற இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பழம்பெருமை வாய்ந்த நகரம்) எனப் புகழப்படுவது. 1967ல் பங்கஜா மில்ஸ், காளீஸ்வரா மில்ஸ், கம்போடியா மில்ஸ் உட்பட 15 ஆலைகள் நலிவடைந்தவை என அறிவிக்கப்பட்டன. அந்த ஆலைகளைத் தவறாக நிர்வகித்த முதலாளிகளைத் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்க, மாபெரும் போராட்ட இயக்கம் உருவானது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வீரம் செறிந்த இப்போராட்டத்தைப் பார்வதி கிருஷ்ணனும் பிற தலைவர்களும் வழிநடத்தியதன் பலனாய், அந்த மில்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு ‘தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன்’ அமைக்கப்பட்டது. பார்வதி கிருஷ்ணன் தொடர்ந்து இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதால் ‘தேசிய டெக்ஸ்டைல் கார்பரேஷன்’ (NTC) 1974ல் உருவானது. மில் தொழிலாளர்களுக்கான ஊதிய உடன்பாடு 1956ல் ஏற்படுவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
(பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தை விரிவுபடுத்திப் பொங்கலூர், பல்லடம் வரையுள்ள வறட்சியான பகுதிகளுக்குப் பாசன வசதி கிடைத்திட, கோவை சுற்றுப்புறப் பகுதி சிறு குறு தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டங்களில் எப்போதும் அவரின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. -- விகடன் 2019 பிப்.20 இதழிலிருந்து )
சர்வதேச அரங்கில்
1957ல் ஏஐடியுசி-யின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும், 1971ல் அவர் கல்கத்தாவில்  செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் மீண்டும் ஏஐடியுசி-யின் துணைத் தலைவரானார்.  1956ல் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரில் நடந்த முதலாவது சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டினைத் துவக்கி வைத்தவர் பார்வதி கிருஷ்ணன். 1975ல் மெக்ஸிகோவில் நடைபெற்ற ‘சர்வதேச பெண்கள் ஆண்டு’ ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் பார்வதி கிருஷ்ணன் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பாராளுமன்றத்திற்குத் தேர்வு
        அவர் 1952ல் முதன் முதலாக பாராளுமன்ற மக்களவைக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1954ல் மாநிலங்களவை உறுப்பினரானார். 1957ல் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் மக்களவைக்கு  இடைத் தேர்தலில் 1974 லிலும், பின்னர் 1977லிலும் வென்றார். 1977ல் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், பெண்கள் குறித்து மன்றத்தில் பேசத் தகாத சொற்களைக் கூறிய போது அவையைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தவர் பார்வதி கிருஷ்ணன். பிரதமரை வற்புறுத்தி வருத்தம் தெரிவிக்கச் செய்தார், பார்வதி.
        பாராளுமன்ற விவாதங்களின் தரம் தாழ்ந்து வரும் நிலை குறித்துக் கவலையோடு பார்வதி வருந்தினார். 2014ம் ஆண்டு, பிப்ரவரி 20ம் நாள் தனது 95வது அகவையில், முதிர்ந்த வயதில், கோவையில் காலத்தோடு ஐக்கியமானார், ஆகச் சிறந்த தோழியர் பார்வதி கிருஷ்ணன்.
        அவர் கவலை தெரிவித்த அன்றைய சிறு பிரச்சனைகள், இன்று பூதாகாரமாக நாளும் நாளும் தொடர்ந்த வண்ணம் வெருட்டுகின்றன.  பாராளுமன்றம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது இந்த நாட்களில்.
அவர் அன்று சொன்னது அர்த்தம் உள்ளது, ஆய்ந்து அறிய ஆயிரம் உள்ளது!
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்