Tuesday 8 March 2022

மகளிர் தினச் சிறப்பு பதிவு : "ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண்களுக்குத் தொடரும் பாதிப்பு”

 


ஆணாதிக்கப் பண்பாட்டில்

இன்னும் பெண்களுக்குப்  பாதிப்பு

--இந்திரா ஜெய்சிங்

            செல்வி X எதிர் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் மற்றும் ஒருவர் (சிவில் ரிட் மனு எண் 2018ம் ஆண்டின் 1137) வழக்கில் வாதாடும்போது என்னைப் பாதித்த பல விஷயங்களில் ஒன்று, படிநிலை எனக் குறிப்பிடப்படும் “கீழமை நீதிமன்றம்“ (சபார்டினேட் ஜுடிஷியரி) மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு இடையேயான உறவு. ‘கீழமை நீதிமன்றம்’ என்ற பதம் துரதிருஷ்டவசமாக அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 235ல் காணப்படுகிறது. அதன் பொருள், குறிப்பிட்ட மாநிலத்தின் உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தின் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அதன் கீழ் அமைந்த (மாஜிஸ்டிரேட், முன்சீப் போன்ற) கீழ்மட்ட நீதிமன்றங்களின் மீது தனது கட்டுப்பாட்டைச் செலுத்தும் என்பதே. அந்தக் கட்டுப்பாட்டில் நியமனம், பதவி உயர்வு, மாநிலத்தின் நீதித்துறை சார்ந்த நபர்கள் மற்றும் மாவட்ட நீதிபதி பதவிக்குக் கீழ் உள்ள பதவிகளில் இருப்பவர்கள் சேவைக்கு ஒப்புதல் அளித்தல் முதலியனவும் அடங்கும்.

            இதன் சரியான பொருள் என்ன? அதைப் புரிந்து கொள்ள இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 311 உடன் இணைத்துப் படிக்க வேண்டும். ஷரத்து 311, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு அளிக்கிறது. அதன்படி, மத்திய அரசின் அகில இந்தியச் சேவையோ அல்லது மாநில அரசின் சேவையிலோ பணியாற்றும் ஊழியர்களில் எவரையும், அவரைப் பணிநியமனம் செய்த அதிகாரியின் அந்தஸ்துக்குக் கீழ்நிலையில் உள்ள அதிகாரி பணி நீக்கம் செய்யவோ அல்லது சேவையிலிருந்து அகற்றவோ கூடாது என அந்தச் சட்டப் பிரிவு பிரகடனப்படுத்துகிறது. இன்று மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் “கீழமை நீதிமன்ற“ங்களில் பணியாற்றும் நீதிபதிகள் அனைவருக்கும் அவர்கள் அரசு ஊழியர்கள் (பப்ளிக் சர்வன்ட்ஸ்) என்ற முறையில் அந்தச் சட்ட ஷரத்து 311 பணிபாதுகாப்பு அளிக்கிறது.

            ஷரத்து 235 மற்றும் 311 இரண்டையும் ஒருபக்கமும், மறுபுறத்தில் குடியரசு சார்ந்த ஜனநாயகம் (ரிபப்ளிகன் டெமோக்கிரசி) எழுப்பும் கோரிக்கைகளையும் எவ்வாறு ஒருவர் இணக்கமாக புரிந்து கொள்வது? (அவ்வாறு இணக்கப்படுத்த) நீதிபரிபாலன அமைப்பின் பல்வேறு மட்டங்களில் உள்ள உறவுநிலையில் முழுமையான புதிய ஜனநாயகக் கலாச்சாரத்திற்கான தேவையைக் கொண்டுவருகிறது இல்லையா? இந்தக் கேள்வி, பெண் நீதிபதிகளைப் பொருத்து மிகக் கூர்மையாக உணர்வுபூர்வமாக மேலெழுகின்றது. சட்ட முறைமைகளிலும் (லீகல் சிஸ்டம்) பாலியல் துன்புறுத்தல் என்பது வாழ்வியல் உண்மை. அது பணியில் இருக்கும் நீதிபதியானாலும் சரி, பணிஓய்வு பெற்ற நீதிபதியாயினும் சரி –அவர்கள் பயிற்சியாளர்களோ, தொழில் நடத்தும் வழக்கறிஞர்களோ அல்லது நீதிபதிகளோ – பெண்களைப் பொருத்தவரை அதுதான் வாழ்வியல் உண்மை. (எங்கெங்கும், எல்லா மட்டத்திலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்திக்கிறார்கள்)

            படிநிலையில் கீழுள்ள நீதிபதிகள் மீது மேற்பார்வையிடும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரத்தை வைத்து ஒருவர் என்ன செய்வது? அவர்கள் அந்த அதிகாரத்தை ஏறத்தாழ கீழ்நிலை நீதிபதிகள் மீது வாழ்வா சாவா என்ற வகையில் பயன்படுத்தி “அவர்களது ஆண்டு இரகசிய சேவைக் குறிப்பேட்டை நாசப்படுத்துகிறார்கள்”; அவர்களுக்குச் சாதகமாக ஆதரித்து அல்லது சாதகமற்ற மோசமான குறிப்புக்களை எழுதி அவர்களைக் கடைச் சரக்கு பொருட்கள் போல நடத்துகின்றனர். நேரடியாக மூன்று பேரின் --சாதாரணமானவர்கள் இல்லை, மூன்று பெண் நீதிபதிகளின் -- வழக்குகளை நான் நடத்தினேன்; அவர்கள்,  பணியிடத்தில் பாலின துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக ஆண் நீதிபதிகளை வழக்காடு மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். இருப்பினும் அவை வெற்றிபெறாத முயற்சிகள். முதல் வெற்றி, தொடக்கத்தில் குறிப்பிட்ட செல்வி X எதிர் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற ரிஜிஸ்ட்ரார் ஜெனரல், மத்திய பிரதேச வழக்கில் கிடைத்தது.

            படிநிலை (hierarchy) ஏன் இந்த அளவு பாதித்துச் சங்கடப்படுத்த வேண்டும்? நீதிசார்ந்த முடிவுகளை மேற்கொள்வதற்குப் படிநிலை அதிகார அமைப்பு நிச்சயமாகத் தேவை என்பதை எதிர்த்து நான் வாதிடவில்லை; மாறாக, நீதித்துறை நிர்வாகத்தில் அத்தகைய படிநிலை இருப்பதற்குத் தேவையில்லை. இப்போது நீதித்துறையை இந்தியமயமாக்குவது என்ற பேச்சு அதிகமாக அடிபடுகிறது. அப்படியெனில் சரியாக இதன் பொருள் என்ன? என்னைப் பொருத்தவரை இந்திய நீதிபரிபாலனத்தை ஜனநாயகப்படுத்துவது, சமத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது என்பதே அது. முதலில் சொன்ன வழக்கில் மத்திய பிரதேச அரசுக்காக ஆஜரான இந்திய ஜொலிசிட்டர் ஜெனரல் வாதங்களின்போது தன்னைப் பொருத்து ஆங்கிலப் பொதுச் சட்டத்தைவிட (இங்லீஷ் காமன் லா) இந்திய நீதிபரிபாலனத்தைச் சார்ந்து இருப்பதை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

            மேலும், இந்தியாவிலேயே நாம் பின்பற்றுவதற்குப் பொதுமான முன்னுதாரணங்கள் உள்ளன; எனவே எல்லை தாண்டி விடைகளைக் காண நாம் நாடவேண்டியதில்லை என்றும் கூறினார். அதற்கு என்னுடைய மறுமொழி, ‘அது அவரது பங்கில் வரவேற்கத்தக்க தேசிய உணர்வாக இருக்கலாம்; ஆனால், இன்று இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் இங்கிலீஷ் காமன் லா ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது என்ற உண்மையை நாம் மறக்கக் கூடாது, அது நமது நீதிபதிகளிடம் குறைந்தபட்ச செல்வாக்கு மதிப்புடையதாகவும் இருக்கிறது’ என்றேன். சர்வதேசியம், பிரதிநிதித்துவ ஜனநாயகம், குடிமக்கள் பங்கேற்கும் குடியரசுயியல் என்பனவே நாம் விரும்புவது. அந்த விஷயத்தைப் பொருத்த அளவில் அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 235ன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நாம் ஏன் நீதித்துறை அல்லது சட்டத் தொழில் சார்ந்த மேலும் கூடுதல் பிரதிநிதித்துவத்தை உடையதாக பார்க்கக் கூடாது?

இந்திய நீதித்துறையில் பிரதிநிதித்துவம்

            2021 அக்டோபர் 1ம் தேதியில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மொத்தமுள்ள 659 நீதிபதிகளில் 70 பேர் மட்டுமே பெண்கள். (மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்பதை நினைவில் கொள்க.) தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் பி ஆர் கவாய் மற்றும் சி டி ரவிகுமார் இருவர் மட்டுமே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த காலங்களில் மேலும் 3 எஸ்சி நீதிபதிகள் பணியாற்றி உள்ளனர். உச்சநீதிமன்றம் உருவான 71 ஆண்டுகால வரலாற்றில் ஒரே ஒரு நீதிபதி மட்டுமே பழங்குடி இனத்தவர். மேல்நிலை நீதிமன்ற அமைப்புகளில் (ஆண், பெண் அல்லாத) பிற பாலினத்தவர், [LGBTQ+ நபர்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படுவோர்] எவரும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும், வெளிப்படையான ஹே நபரான (gay lawyer) சௌரப் கிர்பால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்க உச்சநீதி மன்றத்தால் சிபார்சு செய்யப்பட்டுள்ளார்.  

            கீழமை நீதிமன்றங்களில் 30 சதவீத நீதிபதிகளே பெண்கள். 2018 புள்ளிவிபரப்படி, 11 மாநிலங்களில் மொத்தமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) நீதிபதிகள் வெறும் 12 சதவீதம், ஒப்பீட்டளவில் அந்த வகுப்பு மக்கள் தொகையின் பங்குக்கு அது மிகவும் குறைவு. மாவட்ட நீதிமன்றம் உட்பட கீழமை நீதிமன்றங்களில் தலித் பிரிவு நீதிபதிகள் 14 சதவீதத்திற்குக் குறைவானது; பழங்குடி இனத்தவர் சுமார் 12 சதவீதம். இந்திய நீதிமன்ற அமைப்பு உண்மையில் பிரதிநிதித்துவத்திற்கு வெகு தொலைவில் உள்ளது.

படிநிலையால் பாதிப்பு

            படிநிலை ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம். ஏனெனில், படிநிலை அமைப்பு, தந்தைவழிப்பட்ட ஆணாதிக்கம் மற்றும் தள்ளி ஒதுக்கி வைக்கப்படும் கலாச்சாரத்தால் பெண்களாகிய நாம் பலியாகி பாதிக்கப்படுகிறோம்! இந்தியா ஒரு கட்டத்தை அடைந்து விட்டது; அதில் பெண்கள் மட்டுமல்ல அனைத்துக் குடிமக்களும் பாலின வித்தியாசமின்றி இந்தப் படிநிலை அமைப்பு மற்றும் ஆதிக்கஅதிகாரத்துவக் கலாச்சாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவராகின்றனர். அனைத்து வடிவிலான ஒடுக்குமுறையை எதிர்ப்போர் அனைவரும் பழிவாங்கப்படுகின்றனர்.

நீதிமன்றங்களில் மாறுதலான அணுகுமுறை

            அடுத்த பாய்ச்சல் மாறுதலுக்கு நீதித்துறை தயாரா, அதாவது (படிநிலையால் பாதிப்புக்கு உள்ளான) சொந்த வீட்டை, தனது நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்த நீதித்துறை தயாரா?

            பெண் நீதிபதி ஒருவர் மற்றொரு நீதிபதியால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டும் நிலைமை மீண்டும் எப்போதும் வரக்கூடாது. அத்தகைய ஒரு நிலையை உருவாக்குவதற்கு நமது நீதி மற்றும் சட்ட முறைமையைப் படைப்பூக்கமிக்க முறையில் உண்மையில் மீட்டுருவாக்கம் செய்வது அவசியத் தேவையாக உள்ளது: அது, பாலின (சமத்துவ) நீதிக்கு அப்பால் செல்வது மற்றும் எங்கெங்கு படிநிலைகள் காணப்படுகின்றனவோ அவற்றைத் தீவிரமாக ரத்து செய்து நீக்குவதுமாகும்.

மொழியின் செல்வாக்கு

            நாடு புகழும் நமது சில நீதிபதிகள், உதாரணத்திற்கு நீதியரசர் எஸ் ரவீந்தர பட் மற்றும் நீதியரசர் டாக்டர் எஸ் முரளிதர் நீதிமன்றத்தில் தாங்கள் “மை லார்டு” அல்லது “தங்கள் லார்டுஷிப்” என விளிக்கப்படுவதை விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்; ஆனால் இது தனிப்பட்ட நீதிபதிகளின் கருத்தே தவிர நடைமுறையோட்டத்தின் முக்கிய கருத்தாகவில்லை. அடிக்கடி நாம் பயன்படுத்தும் மொழி, அனிச்சையான நடத்தை அணுகுமுறை போக்குகளைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

அது (பயன்படுத்தும் மொழியானது) நீதித்துறைக்கு நீதியரசர்கள் எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பி ஆர் கவாய் ஆகியோர் மூலமாக நினைவூட்டுகிறது; இந்த வழக்கில், இந்திய அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 12 வழங்கும் பொருளின்படி ‘அது’ (இட்) என்பது ‘அரசு’ (ஸ்டேட்) என்றே பொருள்படும்; மற்றும் (எனவே) சொந்த நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்காக அரசுக்கு வழங்கப்பட்டுள்ள (சட்ட நடவடிக்கை தண்டனையிலிருந்து) விலக்கு (impunity) என்பதை அழித்துவிடலாகாது. இந்த impunity விலக்குதான், எல்லா அதிகார அமைப்புகளிலும் எங்கெங்கு காணப்பட்டாலும், அந்த இடங்களில் எல்லாம் புதிய நீதி முறைமையை அமர்த்தி சவாரி செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆங்கில வரலாற்றாளர் தாமஸ் ஃபுல்லர் வார்த்தைகளை அப்படியே சரியாக நீதிபதிகள் திரும்பச் சொல்வதுபோல, பிரிட்டிஷ் நீதிபதி லார்டு டென்னிங் அவர்களும் அதனை மேற்கோள் காட்டுவார்: “ஒருபோதும் மிக உயர்வாக நீங்கள் இருக்காதீர்கள், சட்டம் உங்களுக்கு மேல் உள்ளது.”

(கடைசி பத்தி ஆங்கில மூலத்தில் பின்வருமாறு:           

It took Justices L. Nageswara Rao and B. R. Gavai to remind the judiciary in this case that ‘It’ is the “State” within the meaning of Article 12 of the Constitution of India, and to destroy impunity for its own administrative actions. It is this impunity that, wherever found, in all institutions of power, required to be ridden off to imagine a new justice system. As the judges have aptly reproduced the words of English historian Thomas Fuller, which had been quoted by the British judge Lord Denning, “Be you never so high, the law is above you”)                            (IPA Service)

                                                                                                              --நன்றி : நியூஏஜ் (மார்ச் 6 –12)

--தமிழாக்கம் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்   

No comments:

Post a Comment