ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா
ஜந்தர் மந்தர் போராட்டம்:
இளைஞர்கள்
பயத்தை வெற்றி கொள்ள
உதவிய AISF-AIYF
–அனில்
ரஜீம்வாலே
1936
ஆகஸ்ட் 12 –13ல் நிறுவப்பட்டvஐஎஸ்எப்
(அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), தனது 90வது ஆண்டு அமைப்பு தின விழாவைக் கொண்டாடுகிறது.
அன்றிலிருந்து அது பல்வேறு மாற்றங்கள், போராட்டங்கள் மற்றும் மறுகட்டமைப்புகளின் சகாப்தங்களைக்
கடந்து, எப்போதும் வெற்றிகரமாக நடை போடுகிறது. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும்
மாணவர் பெருமன்றம், சமீபத்தில் தலைநகரை உலுக்கிய ‘கரப்பான்பூச்சிகள்: போராட்டம்(!)
உட்பட முக்கியமான பெருந்திரள் போராட்டங்களை ஊக்கப்படுத்தியது.
காக்ரோச்
ஜனதா கட்சி (CJP) தலைமையில் சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தர் மாணவர்களின் எழுச்சியில்
ஏஐஎஸ்எப் தீவிரமாகப் பங்கேற்று போராட்டத்தை வடிவமைத்தது. அதில் பங்கேற்ற மாணவர்கள்
ஏஐஎஸ்எப் அமைப்பு, அதன் லட்சியங்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி ஏராளமாகத் தெரிந்து கொண்டனர்.
‘கரப்பான் பூச்சி’ எழுச்சி
முதலில்
நாம், தங்கள் போராட்டத்தின் புகழ்மிக்க திடீர் வெற்றியால் நாட்டைத் திரும்பிப் பார்க்கச்
செய்து, மரபார்ந்த பல்வேறு தடைகளை உடைத்த ஜந்தர் மந்தர் எழுச்சியை நெருக்கமாகப்
பார்ப்போம். பின்னர் நாம் ஒரு கழுகு பார்வையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்
பங்களிப்புகளை அதன் வரலாற்றுப் பின்னணியில் பார்ப்போம்.
நீதிபதிகளில்
ஒருவரால் இளம் தலைமுறைக்கு இழைக்கப்பட்ட அவமானம், ஒரு வகையில் உண்மையில் ஆளும் கட்சி
அணுகு முறையின் பிரதிபலிப்பே: அதற்குப் பின் நவீனத்துவம் அதற்கே உரிய முறையில் காட்டிய
பொருத்தமான மறுவினைதான் ‘கரப்பான் பூச்சி’ எழுச்சி. [பார்வை: மே 15 நீதிமன்றத்தில்
ஒரு வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி “கரப்பான் பூச்சிகள் போல சில இளைஞர்கள்
உள்ளனர்” என்றும்; சில வழக்கறிஞர்கள் ’சமூகத்தின் ஒட்டுண்ணிகள்’ என்றும் கருத்துத்
தெரிவித்ததாகவும்;. மறுநாள் அதை மறுத்த நீதிபதி அதற்கு விளக்கமும் அளித்தார் என்றும்
கூறப்படுகிறது].
அவர்கள்
(அரசு) முரட்டுப் பலப்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் மூலம் மாணவர்களுக்குப் ‘பாடம்’
புகட்ட விரும்பினார்கள். ஆனால் நடந்தது என்னவோ, நாடு முழுவதும் ‘கரப்பான்
பூச்சிகள் மயம்’ எனப் பரவிய ஓர் எழுச்சிதான்; அது நிர்வாக முறைமைக்குள் விரிசல்கள்
ஏற்பட வழி வகுத்தது.
இன்றைய
தகவல் தொழில்நுட்ப யுகத்தில், அரசு அதிகாரத்திற்குச் சவால் விடுக்கும் வகையில்
ஒரு கதைக்கள விவரிப்பு உடனடியாக உருவாக்கப்படுகிறது. அதுதான் இணையதள வலைப்பின்னல் மற்றும்
அதைப் பயன்படுத்தும் தலைமுறையின் ஆற்றல்.
மாணவர்
பெருமன்றமும் கூட சில அறுபது ஆண்டுகளுக்கு முன்– பாட்னாவில் கட்டணம் 50 பைசா
உயர்த்தப்பட்டபோது அதை எதிர்க்க மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்து– 1965 ஆகஸ்ட் 9ல்
பெருந்திரள் போராட்டத்தை நடத்தியது. மாணவர்கள் தடியடியடிகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும்
அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். போராட்டம் பீகார் முழுவதும் பரவியது. அது பெருமன்றத்திற்குப்
புது பிறப்பானது. மாணவர் இயக்கத்தின் விளைவுதான் 1967 தேர்தலில் 17 மாநிலங்களில் 9ல்
காங்கிரஸ் அரசுகள் தோல்வியடைந்தது.
அச்சம் ஓடியது
இன்று,
அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்குலைக்கவும், ஜனநாயகத்தை அழிக்கவும் துணிந்துள்ள வலதுசாரி
வகுப்புவாத பாசிசச் சக்திகளின் ஆட்சியின் கீழ், நாட்டில் நிலவும் காட்சி மிகவும் மோசமாக
உள்ளது. 2014ல் இருந்து பாஜக –ஆர்எஸ்எஸ் ஆட்சி அச்ச உணர்வு, போலி தேசியவாதம் மற்றும்
பிரிட்டிஷ் ஆட்சி பாரம்பரியமான வகுப்புவாத ‘பிரித்தாளும்’ கொள்கை முறைமையைப் புகுத்தி
கட்டி எழுப்புகிறது. தடியடி பலப்பிரயோகம், செய்திஊடகம் மற்றும் சட்டத் துறை வழிகளைத்
தவறாகப் பயன்படுத்துவது பிரிட்டிஷ் காலனிய முறைகளில் ஒன்றை நினைவூட்டுகிறது.
சமீபத்திய
காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள் போராட்டத்தின் ஆகப்பெரிய லாபம், மக்கள் மத்தியில்
ஆளும் தன்னலக் குழு கும்பலுக்கு எதிரான அச்ச உணர்வு முழுமையாக ஒழிந்ததுதான். ஆளும்
பாஜக கூட்டணி அதனுள் விரிசல்கள் ஏற்பட்டு, பலவீனமான நிலையில் அது காணப்படுகிறது. அந்த
நிகழ்முறை ஓராண்டு காலத்திற்கு நீடித்த விவசாயிகளின் போராட்டத்தின்போது தொடங்கியது:
அப்போது தேசியத் தலைநகரை அவ்வளவு நீண்ட காலம் சூழ்ந்து கொண்ட விவசாயிகள் இறுதியில்
அனைத்துத் தடைகளையும் உடைத்து ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முடிந்தது.
பெருந்திரள்
போராட்ட முறைகள் மற்றும் மக்களை அதில் ஈடுபடுத்துவது குறித்து ஒருவித உணர்வு பற்றிப்
படர்ந்தது. புதிய ஜென்சி தலைமுறை குறித்துப் பல்வேறு கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன;
மற்றும் தற்போது ஆல்பா தலைமுறை முதலானவைகள் குறித்தும் பேசப்படுகிறது.
தற்போதைய எதிர்ப்புப் போராட்டம், தகவல் புரட்சி ஏற்படுத்திய சில பின் நவீனத்துவக் கூறுகளுடன் அமைந்த வேறுபட்ட பின்னணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை
ஏஐஎஸ்எப் பெருமன்றமும் மற்றவர்களும் பயன்படுத்த கற்று வருகிறார்கள். சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எழுந்த எழுச்சியின் வேகமான சமூக ஊடகப் பரவலுக்கு முன்னால், லத்திகள் மற்றும் வன்முறை ஆகியவை வெறும் அடையாளங்களாகவே சுருங்கிப் போயின. போலீஸ்காரர்களைப் ‘போலீஸ் மாமா’ என்றழைக்கப்படும் அளவு மாற்றம் நிகழ்ந்தது, சில போலீஸ்காரர்களே கூட போராட்டத்தில் கலந்து கொண்டனர். படைப்பாற்றல்
மிக்க பங்கேற்புடன், அந்த நிகழ்வின் விவரிப்பு அந்த இடத்தில் அப்போதே உருவாக்கப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகள் காட்சி பிம்பங்களாக மாற்றப்பட்டு, பின்னர் வெகுஜன எதிர்ப்பாகவும்
தன்னிச்சையான முழக்கங்களாகவும் உருவெடுக்கின்றன. சமூக-பொருளாதார நெருக்கடியின் தனித்துவமான
வெளிப்பாடான இந்தப் பேராற்றல்தான், அரசு இயந்திரத்தையும் அதிகாரப்பூர்வ ஊடகங்களையும்
எதிர்கொண்டது.
வினாத்தாள்
கசிவுகள் அதிருப்தியின் பல்வேறு போக்குகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதும்,
ஸ்ரீ ராமர் கோயில் நன்கொடைகள் ஊழலிலும், இ-20 எனப்படும் பெட்ரோலில் 20% எத்தனால்
கலப்புப் பிரச்சனை தவறாகக் கையாளப்படுவதிலும் என இப்படி உருவாகி வந்தன –ஒரு கட்டத்தில்
அது மாபெரும் போக்கானது.
ஆனால்
பல பிரிவுகள் மத்தியில் அதிருப்தி பரவியது என்ற உண்மையை ஆளும் கட்சியும் ஆட்சி நிர்வாகமும்
அசட்டையாக ஒப்புதல் என எடுத்துக் கொண்டன : (அதாவது ஆளும் கட்சி தங்கள் ஆதரவு தளமாக
கருதிய) படித்த நடுத்தர வர்க்கங்களின் அந்த இளைஞர் பிரிவுகள் – மடிக்கணினி, நவீன திறன்
கைபேசி மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகத் தளங்களில் பணியாற்றும்– பிரிவினர்கள்
மத்தியில் அதிருப்தி பரவியது.
ஏஐஎஸ்எப் –ஏஐஒய்ஃப் மற்றும்
இடதுசாரிகள் பொதுவாக வகித்த பாத்திரம்
தினசரி பத்திரிகைகளும் கூட மாணவர் பெருமன்றம் மற்றும் பொதுவாக இடது அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் நோக்கத் தெளிவுக்காக, அவை வகித்த பெரும் பங்கை அங்கீகரித்துள்ளன. தொடக்கத்தில் திணறித் தடங்கல் மற்றும் தயக்கத்துடன் தொடங்கிய
இயக்கம் குறித்து முதலில் சந்தேகங்கள் இருந்தன. எனினும் வாஞ்ச்சுக்வின் உண்ணாவிரதப் போராட்டம் சில நம்பிக்கைகளை ஊட்டியது. இடது அமைப்புகள் குறிப்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் விராஜ் தேவங், தினேஷ், ஹரிஷ் பாலா போன்ற பல தலைவர்கள் இயக்கத்தை நிலை நிறுத்த ஏராளமான களப்பணிகளைச் செய்தார்கள். சிஜெபி தலைவர்கள் பெரும் பணியாற்றினர். மெல்ல மெல்ல இயக்கம் நம்பிக்கை அடைந்து அகில இந்தியப் பெருந்திரள் போராட்டமானது.சிபிஐ
பொதுச் செயலாளர் தெளிவாக அதை எடுத்துக் கூறினார்: “அது அரிதான ஓர் இயக்கம். .. மாணவர்களின்
இயக்கம் பாஜகவின் ஆணவத்தைத் தோற்கடித்து உள்ளது”. நீண்ட காலம் பதவியை ராஜினாமா
செய்ய மறுத்த ஒன்றியக் கல்வி அமைச்சர் இறுதியில் பதவி விலக வேண்டியதாயிற்று.
இந்த
அதிருப்தி அமைப்பு ரீதியானதும் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ அரசின் நியாயமற்ற கொள்கைகளுக்கு
எதிரானதும் ஆகும். முழுமையான கல்வி முறைமை ஆழமான நெருக்கடியில் உள்ளது; மாணவர்களின்
எதிர்காலம் குறித்து முழுமையாக அக்கறையற்று, பாடத்திட்டம், தேர்வுகள் மற்றும் எதிர்காலத்துடன்
அது பொறுப்பற்ற முறையில் விளையாடுகிறது. மாநிலம் அடுத்து மாநிலமாக, குறிப்பாக ஒன்றியத்தை
ஆளும் கட்சியின் மாநிலங்களில் கல்விமுறை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைந்துள்ளது.
இதுவரை
நெகிழ்வு போக்கு மற்றும் அமைதியுமாக இருந்ததாகக் கருதப்பட்ட நடுத்தர வர்க்கங்களின்
அதிருப்தி அது; நேரடி மற்றும் மறைமுக வரிகளைக் கட்டி தேசிய வருவாய் விகிதாசாரத்தில்
பெரும் பங்களிப்பைச் செலுத்திய அந்த வர்க்கங்கள், பதிலுக்குக் குறைவாகவே திரும்பப்
பெற்றது. நீண்ட காலமாகப் பொறுமையுடன் காத்திருந்த நடுத்தர வர்க்கம் ஏதோ ஒரு தருணத்தில்
வெடித்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக உணர்வு இந்த விழிப்புணர்வு மாற்றத்தில்
ஆகப்பெரிய பங்கை வகித்தது –இன்று அது ‘தகவல்’ மற்றும் எலக்ட்ரானிக் நேரலை விழிப்புணர்வால்
பெரிதும் வடிவமைக்கப்- பட்டுள்ளது.
இதன் விளைவாய், இந்த விழிப்புணர்வுடன் கட்டமைக்கப்பட்ட இளைஞர்கள்
தடியடிகள், கண்ணீர் புகை மற்றும் அட்டூழியங்களைச் சந்தித்த போதும் பின்வாங்காத வகையில் போதுமான துணிச்சல் பெற்று விட்டனர்.இவ்வாறாக,
உளவியல் மற்றும் அரசியல் ரீதியான ஒரு தடை கடக்கப்பட்டு, விழிப்புணர்வில் ஒரு மாற்றம்
ஏற்பட்டது; இதன் விளைவாக, பெருகிவரும் மக்கள் கூட்டம் இனி எவ்வித பாதிப்புக்கும் எளிதில்
உள்ளாகக்கூடிய நிலையில் இல்லை என்பதோடு, தவறான பிரச்சாரங்களாலும் வழிநடத்தப்படுவதில்லை.
மேலும்
மாணவர்கள் என்ன விரும்புகிறார்கள்?
முதலில் நியாயமான தேர்வுகள். நீறு பூத்த நெருப்பாக
நீண்ட காலம் அதிருப்தி கனிந்து வந்தது. வழிபாட்டுத் தலங்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்ட
பிறகு அது வெடித்து வெளியே வந்தது! அரசு தனது முக்கிய தந்திரோபாய சீட்டை (ஆட்டத்தில்)
இழந்தது.
அரசுத்
தரப்பு, மாபெரும் இயக்கத்தைத் தவறான மற்றும் கெடுமதி வண்ணங்களில் சித்தரித்துக் காட்ட
முயன்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் ஆளும் வட்டங்களின்
உண்மையான வர்க்க குணத்தை அம்பலப்படுத்தியது.
ஒரு
கட்டத்தில் அரசு முழுமையாகப் பதற்றத்தில் ஆழ்ந்து நடுங்கியது.. விரிசல்கள் தோன்றின
மற்றும் ஆளும் வட்டங்களிலேயே அதிருப்தி வெளிப்படையாகப் பரவியதுடன் அரசின் இந்து வகுப்புவாதப்
பேரினவாதப் போக்கு பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
பொது
சொத்துக்கள் மற்றும் சட்டங்களை அழிக்கும் வன்முறை இயக்கங்களை அவர்கள் ஏற்பாடு செய்தும்;
வன்முறை மொழியைப் பயன்படுத்தி, டாக்டர் மன்மோகன் சிங், இந்திரா காந்தி மற்றும்
பிறருக்கு எதிராக வன்முறையைக் கூட பயன்படுத்தியும் கல்வி வளாகங்களில் அமைதியின்மையை
ஏற்படுத்திய நாட்களை பாஜக –ஆர்எஸ்எஸ் முற்றாகவே மறந்து விட்டது. இப்போது அது திரும்பத்
தாக்குகிறது. சில காலத்திற்கு முன்பு வினாத்தாள் கசிவு இயக்கம் உற்பத்தி செய்த ‘விளைப்
பொருள்’ஆன கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானே மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக உறுதியாக
நின்றார். தங்கள் காலத்தில் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறிய மனிதர்களே இன்று தற்போது மாணவர்களுக்கு
‘ஒழுக்கக் கட்டுப்பாடு மீது ‘உபதேசம்’ போதிக்கிறார்கள்!
(வரலாற்றில்.
AISF
நடத்திய முக்கியப் போராட்டங்கள் குறித்து இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியில்) [முதல்
பகுதி முற்றும்]
–நன்றி
: நியூ ஏஜ் (ஆக.9 –15)
–தமிழில்:
நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்.





No comments:
Post a Comment