Tuesday, 28 October 2025

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு --அதன் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் தருணம்

 

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு

–சந்தேகத்திற்குரிய அதன் கடந்த காலத்தை
அம்பலப்படுத்தும் தருணம்

P சுதீர்

–நன்றி : இந்திய பிரஸ் ஏஜென்சி சேவை (IPA Service)

ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்ட நூற்றாண்டைப் பெருமையுடன் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் பெரும் முயற்சிகளின் மத்தியில், திடுக்கிடச் செய்யும் ஒரு காட்சியால் தேசம் அதிர்ச்சி அடைந்தது. உச்சநீதிமன்ற பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அவர்களை நோக்கி காலணியை வீசினார். ஒரு மனுவைத் தள்ளுபடி செய்யும்போது நீதிபதி கவாய் இந்து மதம் பற்றி இழிவாக விமர்சனம் செய்தார் என்பது வழக்கறிஞரின் புகார்.

எனினும், முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முக்கியமற்ற அற்ப நிகழ்வாக்க எந்த எல்லைக்கும் சென்று நிறுவ முயன்றன. ‘காலணியை வீசவில்லை, அது வெறும் பேப்பர் கட்டுஎன கதைத்துக் குழப்ப முயன்றன – ஊடகங்களின் வழக்கம் அதுதானே. மற்றவர்கள், கிஷோர் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றனர்: ‘மத உணர்வுகள் காயப்படுத்தப் பட்ட‘தன் மீது எழுந்த மனவருத்தத்தின் வெளிப்பாடு என அதனை விவரித்தனர் –இப்போது அது ஒரு பிரபலமான சொல்லாடல், சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஒரு சாக்கு!

இந்த அப்பட்டமான கடும் நிகழ்வுப் போக்கை, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை அடையாளப்படுத்த கொட்டி முழங்கி பெரிதுபடுத்தப் படும் சூழலுடன் துல்லியமாகக் குறிப்பிட்டுத் தொடர்புபடுத்துவது கடினம். எனினும் நமது கவனத்தில் இருந்து ஒன்று தப்ப முடியாது –அது, இந்த அருவருக்கத்தக்க நிகழ்வை அடையாளப்படுத்தும் வெறுப்பு மற்றும் பழிவாங்கல் உணர்வும் நிறைந்த சூழல் இதுபோன்ற இணையான நிகழ்வுகள் நமது தேச அரசியல் வாழ்வின் முக்கிய கட்டங்களில் பல உண்டு. அப்போதெல்லாம் அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு கோலோச்சிய சூழலைக் காணலாம். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் படுகொலை.

அந்தக் கொடூரமான செயலை நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஈடுபாட்டைக் குறித்த வலுவான சந்தர்ப்பச் சாட்சியங்கள் இருந்தன; என்றபோதும், கறாரான நேரடி சாட்சியம் இன்மை, எம்எஸ் கோல்வால்கர் போன்ற பல முக்கிய ஆர்எஸ்எஸ்

செயல்பாட்டாளர்கள் (படுகொலையில்) அவர்களின் தனிப்பட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட ஏதுவாயிற்று. கோல்வால்கருக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் எழுதிய கடிதம், “இந்து மகாசபாவுடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் பிரச்சாரம், மகாத்மா கொல்லப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியதுஎனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பை அதன் ‘மேன்மை பெருமைக்காக வானளாவ மக்கள் புகழ அரசு எடுக்கும் முயற்சிகளே, உண்மையில், அதன் சந்தேகத்திற்குரிய கடந்த காலம் குறித்தக் கவனக் குவிப்புடன் பெருமளவில் விவாதங்கள்/ உரையாடல்கள் நடத்த அழைப்பு விடுப்பதாக உள்ளது.

பலருக்கும் இந்தக் கொண்டாட்டம் உண்மையில் அந்த அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது; சவார்க்கர் இந்துத்துவா என்று வரையறுத்ததை, நடைமுறையில் கொண்டு வர ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஷக் கருத்தியல் வேர்களையும் மற்றும் அதன் அமைப்பியல் முறைகளையும் ஆய்வு செய்வதற்கான தருணம் இது. 

இந்துத்துவாவின் சாராம்சங்கள் என்ற தனது நூலின் மூலம் இந்தக் கருத்தியலுக்கான அடிப்படைகளைச் சவார்க்கர் ஏற்படுத்திய போதும், ஆர்எஸ்எஸ் அமைப்புதான், சவார்க்கரால் ஆதரிக்கப்பட்ட ஹிந்து ராஷ்ட்டிரா அமைப்பதை நோக்கிய நடவடிக்கைகளையும், அமைப்பு

ரீதியான வலிமையையும் வழங்கியது. சவார்க்கர் வேறுபட்டதான ஒரு கருத்தியலை, அதாவது அது இந்து சமய நெறிகளைக் குறித்ததன்று; மாறாக, , அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பச்சையான அரசியல் செயல் திட்டம் என்ற கருத்தியல் அடிப்படையிலானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சாவர்க்கர் தனது வார்த்தைகளில், ‘இந்து சமயநெறி கருத்தியல் மற்றும் இந்துத்துவா இடையே குழப்பிக் கொள்வது, இந்துக்களை ஒற்றுமைபடுத்துவதில் ஓர் இடையூறு ஆகிவிடும் –ஏனெனில் சாதிகளால் கட்டமைக்கப்பட்டு செலுத்தப்படும் இந்து சமூகத்தின் (கீழ், மேல் ஏற்றத்தாழ்வான) படிநிலை தன்மை அப்படிப்பட்டது என்று எழுதினார். (சுருக்கமாக, பொதுமக்களின் ‘இந்து சமயநெறி நம்பிக்கை வேறு, ‘இந்துத்துவா வேறு. அது இறை நம்பிக்கை சார்ந்தது – இது அரசியல் நோக்கமுடையது).

எனினும் கடந்த பல ஆண்டுகளில், ஆர்எஸ்எஸ் அமைப்பால் எழுப்பப்படும் கோரிக்கைகள் மற்றும் முழக்கங்களில் இருந்துகூட, இந்துத்துவா நடைமுறைக்குப் பிராமணியம் என்பதே உள்ளார்ந்த சமூகப் பார்வை என்பது தெளிவாகிறது. உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் பத்திரிக்கை ஆர்கனைசர், தேச விடுதலைக்கு முந்தைய நாளில் வெளியான 1947 ஆகஸ்ட் 14 தேதியிட்ட இதழிலேயே, ‘பன்முகக் கூட்டு தேசம் (composite nation) என்ற கோட்பாட்டை முற்றாக நிராகரித்தது: (‘Whither–‘எந்த இடத்திற்கு, ஏன், எதற்காக, எந்த இலக்கை நோக்கி?’--  என்ற தலைப்பின் கீழ் அமைந்த அதன் தலையங்கத்தில்) “நாம் இனியும் தேசிய அடையாளம் என்ற தவறான கற்பிதங்களால் செல்வாக்கு செலுத்தப்பட அனுமதியோம். பெரும்பான்மையான மனரீதியான குழப்பங்களும், தற்போதைய மற்றும் எதிர்காலச் சங்கடங்களையும், சாதாரண உண்மையைத் தயாராக அங்கீகரிப்பதன் மூலம், நீக்க முடியும்; (அந்த உண்மை,) இந்துஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே தேசத்தை – இந்துக்களால், இந்து மரபுகள், கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் விழைவுகள் மீது கட்டப்பட்ட அத்தகைய தேசத்தையும்தேசியக் கட்டமைப்பையும் பாதுகாப்பான மற்றும் உறுதியான அடிப்படையில் கட்ட முடியும்

அதே இதழில் ஆர்கனைசர், தேசியக் கொடியைத் தொடர்ந்து இழிவுபடுத்தி கடுமையாகச் சாடியது: “விதிவசத்தால் அதிகாரத்தில் வந்தமர்ந்தவர்கள், நம் கையில் மூவர்ணக் கொடியைக்

கொடுத்து இருக்கலாம்; ஆனால் ஒருபோதும் அதை மதிக்கவும் முடியாது இந்துக்களால் சொந்தமாக ஏற்கவும் முடியாது.” ஆர்எஸ்எஸ் அதே தொனியில் தேசிய கீதத்தையும் எதிர்த்து, பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது –நிச்சயமாக அந்தப் பாடல், சந்தேகத்திற்கு இடமின்றி, வகுப்புவாதச் சாயலை உடையது மற்றும் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கேலி செய்து கண்டனம் தெரிவிக்கிறது.

இது ஒரு தற்செயல் உடன் நிகழ்வு அல்ல. காலனிய அடிமை தளையிலிருந்து தேசத்தை விடுவிக்கும் பொதுப் போராட்டத்தில் இருந்து அவர்கள் ஒதுங்கி நின்றது மட்டுமல்ல; மாறாக, “நமது முதன்மையான அர்ப்பணிப்பு இந்துக்கள் பாலானதுஎன்று கூறும் அளவு செல்வதை –சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்தேதனது மரபிலேயே சுமந்து வருகிறது. எனவே பிரிட்டிஷ்க்கு எதிராக ஒன்றுபடுவதை விடநாம் இந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டும்; அவர்களை இராணுவ மயமாக்க வேண்டும் என்றது.

    ஆர்எஸ்எஸின் இந்த அதே பல்லவி, ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட சமயத்தில் தொடர்ந்தது: அவர்கள் அதை இந்தியத் தன்மையற்றது என வெளிப்படையாகக் கண்டித்தனர். 1949 நவம்பர் 30 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ் தனது தலையங்கத்தின் மூலம் பழங்கால மனுஸ்மிருதியைச் சட்டபூர்வமாக அரசியலமைப்பு ஆவணமாக ஏற்கக் கோரியது.  அந்தத் தலையங்கத்தில், “ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டத்தில், பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசியலமைப்பு வளர்ச்சி உருவானது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஸ்பார்டாவிலும் ஏதென்ஸிலும் சட்டம் எழுதிய அறிஞர்களாக கருதப்படும் ஸ்பார்டாவின் லைகுர்கஸ் / பெர்சியாவின் சொலோன் காலத்திற்கு வெகுகாலம் முன்பே மனுவின் சட்டங்கள் எழுதப்- பட்டன. இந்த நாள் வரை, மனுஸ்மிருதியில் பொறிக்கப்பட்ட அவரது சட்டங்கள் உலகத்தால் உற்சாகமாகப் பாராட்டுப்பட்டுத் தன்னியல்பாக அதற்குப் பணியவும், உடன்படவும் தூண்டுகிறது. ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டப் பண்டிதர்களுக்கு அது ஒன்றும் இல்லாதது எனப்  பொருள்படுகிறது.” 

அரசியலமைப்புச் சட்டம் குறித்து கோல்வால்கர் 

கோல்வால்கரும் அரசியலமைப்பை முழுவதும் மறுத்து உறுதிபடக் கூறினார், “நமது அரசியலமைப்பும் கூட, மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்புச் சட்டங்களில்

இருந்து பல்வேறு ஷரத்துக்களை எடுத்து ஒன்றாக்கிய பல்வேறுபட்ட கூறுகளால் ஒட்டுப் போட்ட கலவையாக, சிக்கல் நிறைந்ததாக உள்ளது.  நமக்குச் சொந்தமானது என்று அழைக்கத்தக்க எதுவும் முற்றிலும் அதில் இல்லை. அதன் வழிகாட்டுநெறி கோட்பாடுகளில் நமது தேசிய லட்சிய நோக்கம் என்ன? மற்றும் நமது வாழ்வில் முக்கிய சாரம் என்ன என்பதன் மீது ஏதாவது ஒரு வார்த்தை குறிப்பு உள்ளதா?”.

ஒரு மக்கள், ஒரு தேசம் என்ற கோட்பாட்டைத் தன்னிச்சையாக மூச்சு முட்டும் சட்டையில் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இதை, ‘இந்தி, இந்து, இந்துஸ்தான் என்று உடைத்த முழக்கங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியல் உரையாடல்களில் –முஸ்லிம்கள், கிறிஸ்த்துவர்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அதன் தவிர்க்க முடியாத விருப்பத்துடன் கூடியதாகசெல்வாக்குச் செலுத்துகிறது.

எனவே, ஆர்எஸ்எஸ் அடித்தளக் கோட்பாட்டின் அடிப்படையில், எந்தவித நெருடலும் இன்றி இரட்டை விதமாகப் பேசுவத்தைப்  பழகிப் பயின்ற ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர், நாட்டின் பிரதமர் பதவியைப் பிடித்தமரும் வரை இரட்டை விதமாகவே பேசுவார்.

அந்த அடையாளத்தை மறைக்கும் எந்த நிர்பந்தத்தையும் அவர் ஒருபோதும் உணர்வதில்லை; ஆனால் ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின்பால் பிறப்பிலேயே இருக்கும் வெறுப்பு இருந்த போதும், அவரது அரசு அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றுமில்லாத வெற்றுக் கூடாக்கவும்; மேலும் அதைக் குறுகிய, குழுவாத, பாசிச, இந்து ராஷ்ட்டிரா தத்துவத்தால் மாற்றி அமைக்க- வும் உள்ளுக்குள்ளே இருந்து முயற்சி செய்யும். இதற்கு மத்தியில் அவ்வப்போது அரசியலமைப்புச் சட்டத்தை வணங்குவது, அந்த நேரத்தால் ஏற்படும் வெறும் நிர்ப்பந்தம் மட்டுமே –அதிலிருந்தும் இறுதியில் தகுந்த வாய்ப்பான நேரத்தில் விடுபடும்.

எவ்வாறாயினும், இந்த இரண்டு ஷூக்களை இரண்டு கால்களில் அணிவது, சில நேரங்களில் சமாளித்துப் பேலன்ஸ் செய்வதில் கடுமையான செயலாகிவிடும். எனவே ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்வதில் காட்டப்படும் கூடுதலான உற்சாகம், அதன் சந்தேகத்திற்குரிய சுயம்சேவக் சங்கின் கோரமான கடந்த கால நூறாண்டின் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் முரண்படுகின்றன.

நீதிபதி கவாய் மீதான வழக்கறிஞரின் தாக்குதல் மீது பிரதமரின் தாமதமான மென்மையான விமர்சனமும்; காலணி வீச்சு சம்பவத்தால் பதற்றம் அடையாது அதனைக் கண்ணியமாகக் கையாண்ட தலைமை நீதிபதியின் நிதான நிலைப்பாட்டிற்காக அவரைப் புகழ்வதும் ஒருபுறம் இருந்த போதும், வலதுசாரி சமூக ஊடகப் படைவீரர்கள் நீதிபதிக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் அவர் மீது பழிவாங்கல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

சங்கி படை வீரர்களுக்கு, குறிப்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் மனுவாதி ஆதர்ச உற்சாகம் காரணமாக, தலைமை நீதிபதியின் தலித் அடையாளம் மற்றும் புத்தவியல் சார்ந்த நம்பிக்கை அவருக்கு எதிரான இந்த விஷத்தைக் கக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

எனவே ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு, சந்தேகத்திற்குரிய அவர்களின் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் வாய்ப்பை நமக்கு வழங்கி உள்ளது: மேலும் சுதந்திரம், ஜனநாயகம் மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்குத் தேசத்தின் பற்றுறுத்தியை உள்ளடக்கிய நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின் புகழ் கெடுத்துக் களங்கப்படுத்த அரசின் இழிதகவான முயற்சிகளை அம்பலப்படுத்தும் வாய்ப்பை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நமக்கு வழங்கியுள்ளது.

 

: நியூ ஏஜ் (அக். 26 –நவ.1)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்

 


No comments:

Post a Comment