19ம் நூற்றாண்டு வருகையிலிருந்தும், கல்வியும் விழிப்புணர்வும் பரவியதிலிருந்தும்
சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதி கவனக் குவிப்புப் பெற்றது. பெரியார், மகாத்மாபூலே மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் இந்தச் சாதி அநீதி பிரச்சனை மீது கவனக் குவிப்பை ஏற்படுத்தி, சாதியற்ற சமூகத்தைக் கோரி அதற்காகப் பாடுபட்டனர்.
இந்திய மார்க்சியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும்கூட சமத்துவ அடிப்படையிலான
சமூகக் காட்சிப் படிவத்தைச் சித்தரித்து அதில் சாதிக்கு இடமில்லை என்று முன்வைத்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 2015 புதுச்சேரி கட்சி காங்கிரஸ் மாநாட்டில்
ஒரு தீர்மானத்தை வடிவமைத்து நிறைவேற்றியது: அந்தத் தீர்மானம், சமத்துவம் மற்றும் சம
வாய்ப்பு அடிப்படையிலான சமூகத்தை நிறுவ, சாதிப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டம்
இரண்டும் ஒன்றாக இணைந்து செல்ல வேண்டியது குறித்துப் பேசியதுடன், அத்தகைய சமுதாயம்
ஒரு சோசலிச அமைப்பில் மட்டுமே சாத்தியம் எனப் பிரகடனம் செய்தது. இந்திய அரசியலமைப்புச்
சட்டமும் கூட அத்தகைய சமூகத்தை எண்ணத்தில் கொண்டிருந்தது.
எனினும் 1949ல் அமைக்கப்பட்ட நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதனைச்
சந்தித்தது. எதார்த்தத்தில் அத்தகைய சமூகம் ஒன்று இல்லை. அத்தகைய சமூகத்தை அமைப்பதற்குச்
சமூக நீதிக் கருதுகோள் கட்டாயம் என்பதை உணர்ந்தது. இந்திய அரசியலமைப்பை வரைவதும்
முக்கியமான நடவடிக்கை என்பதால், எஸ்சி/ எஸ்டி சமூகத்தினருக்கு அதில் இட ஒதுக்கீடு
அளிப்பது போன்ற உறுதியான நேர்மறை நடவடிக்கைகளை முன்மொழிந்தது. அதன் பின்னர் இது
பிற பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட்டது.
சாதி என்பது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நிலவி வருவது மட்டுமின்றி, மதத்தாலும்
நியாயப்படுத்தப்பட்டதால் சாதி, கருத்தியல் மட்டம் என்பதைத் தாண்டி (ஆதிக்கம் முதலிய)
கள எதார்த்த சக்தி ஆனதுடன், மனித மனத்தையும் கெட்டியாகப் பற்றிப் பிடித்துள்ளது.
இன்று, மேல் சாதியினர் மட்டுமின்றி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற பிற சாதிகளைச்
சார்ந்தவர்களும்கூட இந்தச் சாதி ரீதியான சிந்தனைக்குப் பலியாகி வருவதை நாம் காண்கிறோம்.
எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தப் பிரச்சனையைச் சமாளித்துக் கையாள வேண்டி வந்தது.
சாதாரணமாக சாதி வாதத்தால் நியாயப்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சாதி என்றழைக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததன் மூலம் இந்த மெரிட் தகுதி மாயை நொறுக்கப்பட்டது; மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கடந்த 75 ஆண்டுகள் அனுபவம் இந்த அம்சத்தை நிரூபிக்கிறது. ஆனால் அது சமூகம் முழுமையாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒரு கருத்து மக்கள் கூட்டத்தைக் கவ்வி பிடிக்கும்போது அது எதார்த்தச் சக்தியாகிறது என்றார்
காரல் மார்க்ஸ்; மக்கள் மனதைப் பிடித்துள்ள இந்தச் சாதிப் பிடிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால்தான், அது ஆதிக்க எதார்த்த சக்தி என்ற நிலையிலிருந்து அகற்றப்படும்; அதன் மூலமே சாதியக் கருத்தியலை எதிர்க்கும் யதார்த்தக் களநிலைகளை ஏற்படுத்த முடியும்.இட ஒதுக்கீட்டின் மூலம் அதற்குத் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது.
ஒரு சமூகத்தில் ஒரு தனிநபருக்குக் கண்ணியம் மற்றும் சம வாய்ப்பு இருந்தால் மட்டுமே,
மற்றும் அவன் அல்லது அவள் சாதி, மதம், பாலினம், மொழி முதலான அடிப்படைகளில் பாரபட்சம்
இல்லாமல் பணியாற்றுவதற்கும் வாழ்வதற்கும் முடிந்தால் மட்டுமே சாதி இல்லாத சமூகம் அமைக்கப்பட
முடியும் என்ற உண்மையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உணர்ந்திருந்தது.
சாதிக் சமூகத்தின் தற்போதைய சவாலும், சாதியற்ற சமூகத்தை எதிர்காலத்தில்
நிர்மாணிப்பதும் இந்திய அரசியலமைப்பால் முன்மொழிக்கப்பட்டது. இது நமது அரசியலமைப்பின்
சிறப்பு; இதனை நாம், நவம்பர் 26ல் வர இருக்கின்ற அரசியலமைப்புச் சட்ட
தினத்தில் வலியுறுத்த வேண்டும்.
இந்த லட்சியத்தை நோக்கி முன்னோக்கிச் செல்ல அறிவியல் பார்வை மிக
முக்கியமானது; எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம், (காரண காரிய தர்க்க ரீதியாகச்
சிந்திக்கும் அறிவான) அறிவியல் பார்வையைப் பரப்பும் பொறுப்பை இந்திய அரசிடம் அளித்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக இன்று, கலாச்சாரத் தேசியம் என்ற பெயரில் இந்தப் பொறுப்பு
அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த உலகில், தேச மக்கள் மத்தியில் அறிவியல்
கண்ணோட்டப் பார்வையைப் பரப்பும் பொறுப்பை அரசிடம் வழங்கிய ஒரே அரசியலமைப்புச் சட்டம்
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே.
அதுபோலவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறுவிய அரசு, மதசார்பற்றத்
தன்மையுடையதாகவும், எந்தவொரு மதம், பிரிவு அல்லது சாதிக்குச் சொந்தம் உடையது இல்லை
என்றவாறும் அமைத்தது. நவம்பர் 26ல் அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும்போது இவை நினைவுறுத்தப்பட்டு,
பலப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியா 140 கோடி மக்கள் தொகையுடன் கூடிய ஒரு தனித்துவமான தேசம். இங்கே
சாதி ஒரு வித்தியாசமான வினோதப் பிரச்சனை மற்றும் உலகம் முழுதும் பணியாற்றுவதற்காகச்
செல்லும் இந்தியர்களுடன் சாதியும் கூட உலகெங்கும் பரவுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில்
உள்ள சில மாநிலங்கள் –சாதி அநீதி குறித்தப் புகார்கள் வந்த காரணத்தால்– சாதி பாரபட்சத்திற்கு
எதிரான சட்டங்களை இயற்றி உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதன் விளைவாய் இந்தியச் சமூகம்
சாதி முறையை ஒழிக்க தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்ற புரிதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் விரும்பியது இதைத்தான் மற்றும் இந்தியர்கள் நாம் அனைவரும்
அந்தத் திசை வழியில் பணியாற்ற வேண்டும்.
துரதிஷ்டவசமாக, பெரும்பான்மையான சாதிகள், வேலையில்லாத் திண்டாட்டம்
குறித்த கேள்விக்கான பதில் இட ஒதுக்கீடு என்று நினைப்பதால், விரிவாகப் பரவியுள்ள
வேலையில்லாத் திண்டாட்டம் இதற்கு எதிராகத் தடையாக உள்ளது. ஆனால் அது அவ்வாறு
அல்ல. இந்த யதார்த்த உண்மையை அம்பலப்படுத்த இட ஒதுக்கீடுகள் மட்டுமல்ல, வாய்ப்புகளும்
கிடைக்கச் செய்ய வேண்டும்: அதுவும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டு
வரும்போது மற்றும் தனியார் துறை பிரிவில் இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதையும் மனதில்
கொள்ள வேண்டும். தனியார் மயமாக்கப்படுவதால் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள்
இழக்கப்பட்டது எவ்வளவு என்பது குறித்தப் புள்ளி விபர தரவுகளை ஒருவர் தேடினால், அத்தகைய
புள்ளி விபரங்களே இல்லை என்பது மட்டுமல்ல; மாறாக அத்தகைய பிரச்சனைகள் மீது எந்தப் போராட்டங்களும் நடத்தப்படுவதும் இல்லை –சமூக நீதியைப் பேணுவதில் நாம் உண்மையிலேயே
இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க நினைத்தால் அத்தகைய போராட்டங்கள் இத்தருணத்தின் தேவையாகும்.
‘தனியார்மயத்தைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே’
என்பது நமது முழக்கமாக வேண்டும்!
தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பம்
பயன்படுத்துவதன் காரணமாகப் பணியிடங்கள் குறைக்கப்படுகின்றனவா என்பதன் மீது விவாதங்கள்
நடைபெறுகின்றன. புதிய தொழில்நுட்பம் காரணமாக ஏற்படுத்தப்படும் புதிய பணிகள், சிறப்புத்
திறன்கள் மற்றும் கல்வித் தகுதியைக் கோருகின்றன. புதிய பணிகளுக்குத் தகுதி உடையவராக்க
அனைத்து இந்தியர்களுக்கும் பொருத்தமான அத்தகையத் திறன்கள் மற்றும் கல்வியை அளிக்க முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி தனியார்மயமாக்கல், பணம் உடையவர்களுக்கு மட்டுமே தேவைகளைப்
பூர்த்தி செய்வதால் இதில் உதவிடாது –சமீபத்தில் வருமானம் மற்றும் சொத்தில் சமத்துவமற்ற
தன்மை மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அந்த ஏற்றத்தாழ்வு அபாயகரமான அளவை எட்டி உள்ளதாகச்
சுட்டிக் காட்டுகிறது.
மேற்கண்ட பின்னணியில், இந்தியாவில் சாதிகள் குறித்தப் பிரச்சனையை இந்திய
அரசியலமைப்புச் சட்டம், நடைமுறை சாத்தியமான வகையில் கையாண்டுள்ளது குறித்து நாம் பெருமைப்பட
வேண்டும்.
அத்தகைய பெருமிதம் மிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க
நாம் உறுதி ஏற்போம்! மற்றும் சாதியற்றச் சமூகத்தை அமைக்கும் அதன் விழைவை
நனவாக்க நாம் பாடுபடுவோம்!
--நன்றி : நியூ ஏஜ் (நவ.30 –டிச.6)
–தமிழில்
: நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்.



















